Government Logo Pension title Pension Logo
NEWS

***     Pension payments will be suspended temporally from August 2018 for the pensioners who not submitted their life certificates for the year 2018.    ***     Please be noted that the deadline for the WnOP Re-Registration will be extended to 31st July 2018.    ***     Pension payments will be suspended temporally from June 2018 for the pensioners who obtain pensions via High Commissions and not submitted life certificates for the year 2018 until 25.05.2018.    ***    

தகவல் அறியும் சட்டம் தொடர்பாக ஓய்வூதியத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு.

2016 அம் இலக்க 12 ஆம் பிரிவின் தகவல் அறியும் சட்டம் தொடர்பாக ஓய்வூதிய திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு 2015.05.19 ஆம் திகதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 2017.02.03 ஆம்திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ள இச்சட்டத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் பரந்த அளவில் தெளிவின்மை காணப்படுவதால் அரச நிறுவனங்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சால் நடாத்தப்படும் நிகழ்சித்திட்ட தொடரில் ஓர் நிகழ்சித்திட்டமாக இன் நிகழ்சித்திட்டம் நடாத்தப்படுகிறது.

இச்சட்டத்தின் விசேட ஏற்பாடுகள் தொடர்பில் அரச அலுவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இதில் நிபுணத்துவம் வாய்ந்த மூத்த அதிகாரி திரு. பியதிஸ்ஸ ரணசிங்க கலந்து கொண்டார். மேலும் பொதுமக்களிற்கான தகவல்களை பெறும் உரிமை தொடர்பிலும் இச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பொதுமக்களிற்கு தகவல்களை வழங்கும் போது அதற்கான வரைறைகள் தொடர்பிலும் விசேடமாக விளக்கிக் கூறப்பட்டது.

அதிகமான ஓய்வூதியர்களின் ஓய்வூதியக் கோவைளை கையாளும் அரச நிறுவனம் என்ற முறையில் தனி நபர் தகவல்ளைக் கையாளுதல் மற்றும் பரிமாற்றம் செய்தலின் போது விசேட ஏற்பாடுளை நடைமுறைப்படுத்தும் செயன்முறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. பணிப்பாளர் நாயகம். திரு. எம். ஏ. ஐகத் டி. டயஸ், பதவி நலை அலுவலர்கள், பிரவுத் தலைவர்கள் மற்றும் அனைய அலுவலர்களும் கலந்தகொண்டனர்.