Government Logo Pension title Pension Logo
NEWS

***     Pension payments will be suspended temporally from August 2018 for the pensioners who not submitted their life certificates for the year 2018.    ***     Please be noted that the deadline for the WnOP Re-Registration will be extended to 31st October 2018.    ***     Pension payments will be suspended temporally from June 2018 for the pensioners who obtain pensions via High Commissions and not submitted life certificates for the year 2018 until 25.05.2018.    ***    

“புகுமன் காப்புறுதி “ 90 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமது வாழ்க்கைக் காலத்தின் பெரும்பகுதியை அரச சேவை நலனுக்காக அர்ப்பணித்த ஓய்வூதியர்களது அந்திம காலத்திற்குப் பாதுகாப்பளித்தற் பொருட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதியச் சமூகத்திற்கான சுகாதார காப்பீடு “புகுமன் காப்புறுதி” தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களம் Fair First காப்புறுதி நிறுவனத்துடன் 2017.05.24 ஆம் திகதி திணைக்கள வளாகத்தில் புதிய ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டது.ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் Fair First காப்புறுதி நிறுவனம் சேர்ந்து செய்து கொண்ட உடன்படிக்கையின் பிகாரம் புகுமன் காப்புறுதி திட்டத்தின்

கீழ் தற்போது பெற்றுக் கொள்ளப்படும் தவணைக் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதுடன் பின்வரும் நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன. சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறும் ஓய்வூதியர்களது வயதெல்லை 75 வயதிலிருந்து 90 வயதாக நீடித்தல்.வைத்திய சாலையில் அனுமதி, மருந்துவகை, மருத்துவ வசதிகள் மற்றும் ஆய்கூட அறிக்கைகள் ஆகியவற்றிற்காக பயனாளிகளுக்கு வழங்கப்படும் நன்மைகள் 65 வயதுரை

மூன்று காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் முறையே ரூ .10,000, ரூ .15,000, ரூ .20,000 ஆக அதிகரிப்பதன் மூலம் இலாபம் கிடைக்கிறது.புகுமன் காப்புறுதித் திட்டத்தின் முன்னோடியாகவும் அறிமுகப்படுத்தியவர்களாகவும் Colombo RE Insurance Brokers காணப்படுவதுடன் அவர்கள் அண்மைய அறிமுகத்திற்கான தரகராக பணியாற்றுகின்றனர் மேலும் இந்நிகழ்வில் திரு ஜகத் டி டயஸ் , ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம், ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் Fair First காப்புறுதி நிறுவனத்தைச் சேர்ந்த நிறைவேற்று அதிகாரி சஜீவ் ஜா ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.