pic 1

03/2016  ஆம் இலக்கப் பொது நிர்வாக சுற்றறிக்கைக்கமைய திருத்தப்பட்ட அரசாங்க சேவை சம்பளத்தின் பிரகாரம் 2017/01/01 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் ஓய்வூதியம் பெற்ற அனைத்து அரச சேவை அலுவலர்களது ஓய்வூதியத்தில் திருத்தத்தை மேற்கொள்ளும் பொருட்டு வெளியிடப்பட்ட 31.05.2017 ஆம் திகதிய 14/2019 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட 1/2019  ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்.

அரச சேவை அலுவலர்களது ஓய்வூதியத்சதில் திருத்த்த்தை மேற்கொள்ளல் தொடர்பில் 01/2019 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டுதல்களைப் பார்வையிட இங்கு அழுத்தவும் (Click).

pic 1
“தர்ம தேசன” எனும் உன்னதமான நிகழ்ச்சியொன்று திரிபீடகத்தை ஒர் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தமைக்கான தேசிய நிகழ்விற்கிணையாக ஓய்வூதியத் திணைக்களத்தின் அலுவலர்களது நலன்புரிச் சமூகத்தினால் திணைக்கள வளாகத்தில் 2019.03.22 ஆம் திகதி நடாத்தப்பட்டது. “தர்ம தேசன” நிகழ்வானது அதி வணக்கத்திற்குரிய கடுவல, மஹ்மேவுனவ அஸபுவ தெரரால் பௌத்தைக் காக்கும் உன்னதமான திரிபீடக தர்ம ஓதலுடன் நடாத்தப்பட்டது. அதி வணக்கத்திற்குரிய அரஹத் தேரர் அவர்களால் வாய்வழியா பரம்பரை பரம்பரையாக திரிபீடக தர்மத்தை காப்பாற்றிக் கொண்ட உலகின் தலைசிறந்த ஒரு தேசமாக திரிபீடிக தர்மத்தை இந்த உலகின் மிகப்பெரிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இத் தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக திரிபீடக தர்மத்தை ஆழ்ந்து படிப்பதற்கான தேவைப்பாட்டை அவர் மேலும் வலியுறுத்தினார். இவ் உன்னதமான நிகழ்ச்சியில் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி டயஸ், மேலதிக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் கே.ஆர்.பத்மப்பிரிய, ஓய்வூதியப் பணிப்பாளர் றுசித தர்மசேன ஆகியோர் அடங்கலாக பதவி நிலை அலுவலர்கள் கலந்து சிறப்பித்தனர்.