Department of Pensions launches five new digital systems
The launch of five new digital technology systems, further expanding the "Pensions Management System" of the Department of Pensions, was held on 17.01.2025 under the patronage of the Minister of Public Administration, Provincial Councils and Local Government, Dr. A.H.M.H. Abayaratne, and with the participation of the Secretary to the Ministry, Mr. S. Alokabandara, at the Colombo District Secretariat premises.
Accordingly, five data systems were launched, namely the new official website of the Department of Pensions, the information system for reporting pensioner deaths, the information system for online reservation of railway warrants and obtaining railway permits for pensioners, the new information system for registration in the Widows and Orphans Scheme, and the newly redesigned information system for registering Public Service Provident Funds.
The Minister in charge of the subject stated that the digital technology efforts of the Department of Pensions to bring the pension payment process, which is a complex subject area spread across a wide field, to the fingertips of the retiree will be a first step in realizing the new government policy of providing digital access to the public service.
The IT Division of the Department of Pensions worked to create all these systems by directing its internal staff, and the Registrar General's Department, Sri Lanka Railways, Bank of Ceylon and Sri Lanka Mobitel acted as stakeholders in this massive process, making the G2G concept a reality.
The launch of the new digital technology systems was attended by the Minister in charge of the subject, Dr. A.H.M.H. Abayaratne, the Secretary to the Ministry of Public Administration, Provincial Councils and Local Government, Mr. Aloka Bandara, as well as heads of state and private institutions and retirees.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் ஓய்வூதியத் திணைக்களத்தினை மேற்பார்வை செய்கின்றார்.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் கலாநிதி. ஏ.எச்.எம்.எச். அபேரத்ன அவர்கள் ஓய்வூதியத் திணைக்களத்தினை மேற்பார்வை செய்கின்றார்.
ஓய்வூதியத் திணைக்களத்தின் கீழ் உள்ள மத்திய, பரவலாக்கப்பட்ட, விதவைகள் மற்றும் அநாதைகள், தகவல் தொழிநுட்ப, கொள்கை, முப்படை சேவைகள், வெளிநாட்டு ஓய்வூதியம், பங்களிப்பு, உள்ளக கணக்கீடு, கணக்கு, கட்டுப்பாடு, 1970 தொலைபேசி சேவை மற்றும் ஆவண காப்பகம் ஆகிய கிளைகள் யாவும் கொளரவ அமைச்சரின் மேற்பார்வையின் கீழ் இயங்குகின்றன. அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற சிவில் மற்றும் முப்படை சேவையினை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் அவர்களில் தங்கிவாழ்வோரின் ஓய்வூதியக் கொடுப்பனவு சலுகைகளை வழங்குவதற்காக இக் கிளைகள் திணைக்களத்தினால் உருவாக்கப்பட்டுள்ள வழிமுறைகள் ஊடாக செயல்படுத்துகின்றன.
ஏற்கனவே ஓய்வூதிய தரவு முகாமைத்துவ முறைமை(PMS) மூலம் இணையவழி ஊடாக ஓய்வூதியக் கொடுப்பனவின் பல்வேறு படிமுறைகள் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன.
இதனை முன்னெடுத்து சென்றமைக்காக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் திரு. ஏ. ஜகத் டீ. டயஸ் மற்றும் தலைமை அலுவலகம் மற்றும் நடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் பணிபுரிவும் அலுவலர்களுக்கு அமைச்சர் நன்றியினை தெரிவித்தார்.
மேலும், திணைக்களத்தின் விதவைகள் மற்றும் அநாதைகள் அடங்கலாக வருடாந்தம் ஓய்வூதியம் பெறும் 40,000 இற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களிற்கான சேவைகளை இலகுபடுத்த தகவல் தொழிநுட்ப பிரிவினால் திட்டமிடப்பட்டுள் இணையவழி ஊடான திட்டத்தினை விரைவாக தொடங்குவதற்கு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.
முதன்மை சமூகப் பாதுகாப்பான ஓய்வூதிய முறையின் நிலைத்தன்மையினை உறுதிப்படுத்தும் வகையில் புதிய கொள்கைகளை வகுப்பதுடன் நீண்ட காலமாக உள்ள கொள்கைகளை திருத்தி அமைப்பது குறித்தும் புதிய அரசாங்கம் கவனம் செலுத்தும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி. ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஆலோக பண்டார, ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் திரு. ஏ. ஜகத் டீ. டயஸ், மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி. சுஜானி பெத்தவடு மற்றும் சில அலுவலர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.
2025 ஜனவரி 1 ஆந் திகதி திரு. சாமிந்த ஹெட்டியாராச்சி அவர்கள் உத்தியோகபூர்வமாக புதிய ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பெற்றார்.
2025 ஜனவரி 1 ஆந் திகதி திரு. சாமிந்த ஹெட்டியாராச்சி ஓய்வூதியத் திணைக்களத்தின் புதிய ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பெற்றார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அலுவலரான திரு. சாமிந்த ஹெட்டியாராச்சி 2000 ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார். ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர் திருகோணமலை மாவட்ட செயலாளராக பணியாற்றியுள்ளார்.
ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் திரு. ஏ. ஜகத் டீ. டயஸ் அவர்கள் 2024 ஆம் ஆண்டு செப்டெப்பர் 16 ஆந் திகதி ஓய்வு பெற்றதுடன் 2024 டிசெம்பர் 31 ஆந் திகதி வரை நீடிக்கப்பட்ட இவரது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அவ் வெற்றிடத்திற்கு திரு. சாமிந்த ஹெட்டியாராச்சி அவர்களை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அபிவிருத்தி மற்றும் நிர்வாகம் தொடர்பாக ஏறக்குறைய 25 வருட அனுபமுடைய இவரது நிபுணத்துவம் மற்றும் வழிகாட்டுதலானது ஓய்வூதியத் திணைக்களத்தில் நடைமுறையிலுள்ள தொழிநுட்பம் மற்றும் புதிய முயற்சிகள் மூலமாக 725,000 இற்கு மேற்பட்ட மூத்த ஓய்வூதிய சமூகத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு முறையினை மேம்படுத்த பெரிதும் துணைபுரியும்.
புதிய ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்தின் எதிர்கால கடமைகளுக்கும் மற்றும் ஓய்வூதியத் திணைக்களத்தின் அனைத்து அலுவலர்கள், பிரதேச செயலகங்களில் பணிபுரியும் ஓய்வூதிய திணைக்கள அலுவலர்கள் மற்றும் ஓய்வூதிய சமூகத்திற்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
2025 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் கடமைகள் “தூய்மையான இலங்கை” திட்டத்துடன் ஒருங்கிணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி செயலணி மற்றும் ஜனாதிபதி செயலகம் இணைந்து செயற்படுத்தும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஓய்வூதியத் திணைக்களம் 2025 ஆம் ஆண்டின் புதிய வருடத்திற்கான கடமைகளை இன்று (2025 ஜனவரி 1 ஆந் திகதி) ஆரம்பித்துள்ளது.
திணைக்கள அலுவலர்கள் புதிய ஆண்டிற்கான அரச சேவைப் பிரமாணத்தினை மேற்கொண்டு, தேசிய மற்றும் ஓய்வூதியத் திணைக்கள கொடியினை ஏற்றிவைத்து, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்து புத்தாண்டு கடமைகளை ஆரம்பித்தனர். மேலும் புதிய ஆண்டின் முதல் நாள் மதச் சடங்குகள் மற்றும் பிரித் நிகழ்வுடன் தொடங்கியது.
அதன் பின்னர், மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி. சுஜானி பெத்தவடு அவர்கள் ஓய்வூதிய திணைக்களத்தின் அலுவலர்கள் மற்றும் அனைவருக்கும் பிரதேச செயலகங்களில் பணிபுரியும் ஓய்வூதிய திணைக்கள அலுவலர்கள் 2024 ஆம் ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஓய்வூதியர்கள் மற்றும் தங்கிவாழ்வோர் அனைவருக்கும் சரியான நேரத்தில் ஓய்வூதியக் கொடுப்பனவினை உறுதி செய்வதகான அயாராத உழைப்பிற்கு நன்றி தெரிவித்தமையுடன் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திணைக்களமானது சிவில் அலுவலர்கள், முப்படை உறுப்பினர்கள் மற்றும் விதவைகள்/அநாதைகள் உட்பட 43,472 புதிய ஓய்வூதிய சலுகைகளை செயற்படுத்தியுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டு அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் அலுவலர்களின் ஓய்வூதியத்தினை செயல்படுத்த ஒவ்வொரு ஓய்வூதியக் கோப்பினையும் கருணையுடன் அணுகுமாறு அனைத்து அலுவலர்களிடமும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற “தூய்மையான இலங்கை” தேசிய நிகழ்வின் நேரடி ஒளிபரப்புடன் இணைந்து “தூய்மையான இலங்கை” பிரஜாவுரிமை உறுதிமொழியும் வழங்கப்பட்டது.