pic 1
  நாட்டின் சுபீட்சத்திற்கான நோக்கு எனும் கொள்கை அறிவிப்புக்கமைய புதுவருடம் 2020ஐ வரவேற்கும் உத்தியோகபூர்வ விழா ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி டயஸ் தலைமையில் தை மாதம் 1 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு திணைக்கள வளாகத்தில் நடை பெற்றது.

தேசியக் கொடியை ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஏற்றி வைத்த அதேவேளை ஓய்வூதியத் திணைக்களக் கொடியை மேலதிக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஏற்றிவைக்க இன் நிகழ்வு ஆரம்பமானது. பஞ்சிகாவத்தை ஸ்ரீ அபயசிங்கராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய தேமலுஸே மாதங்கர தேரர் வருகை தந்து பௌத்த மத அனுட்டானங்களை மேற்கொண்டதுடன் பிரித் ஓதி ஐந்து கட்டளைகளையும் வழங்கினார்.

மேலும், இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மதகுருமார்களும் தமது மத அனுட்டானங்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஓய்வூதியத் திணைக்களத்தின் அனைத்து அலுவலர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் தமது உரையில் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்ததுடன் வரவிருக்கும் புத்தாண்டில் ஓய்வூதியத் திணைக்களம் பயணிக்கும் பாதை மற்றும் அங்கு எதிர் நோக்கும் சவால்கள் குறித்தும் ஒரு சுருக்கமான விளக்கத்தை வழங்கினார்.

மேலதிக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் உட்பட ஓய்வூதியத் திணைக்களத்தின் அனைத்து அலுவலர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பங்கேற்பாளர்களுக்காக ஓய்வூதியத் திணைக்கள நலன்புரிச் சங்கத்தால் இந் நிகழ்வின் முடிவில் ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.