pic 1
  2019 வரவு செலவுத் திட்டத்திற்கமைய 2016.12.31 ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெற்ற அனைத்து அரச அலுவலர்கள், முப்படையினர் மற்றும் அவர்களின் வி.அ.ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரது சம்பள மாற்ற செயல்முறை தற்போது தீவு முழுவதும் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேவேளை, அரசாங்கத்தின் ஓய்வூதியக் திட்டங்களுக்கு ஏற்ப 2017 பல பிரதேச செயலகங்கள் தொடர்புடைய ஓய்வூதியத்தை வெற்றிகரமாக சரிசெய்துள்ளன. ஏனைய பிரதேச செயலகங்களின் ஓய்வூதிய அலுவலர்கள் உட்பட அனைத்து அலுவலர்களும் பகல் இரவாக முழு அர்ப்பணிப்புடன் இச் சம்பள மாற்றப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வூதியத் திணைக்களம் ஓய்வூதிய மாற்றத்திற்கான ஒரு தகவல் தொழில்நுட்ப முறைமையை உருவாக்கியுள்ளது, ஓய்வூதியக் கணக்கீடுகள் நூறு சதவீதம் துல்லியமாகவும் வெளிப்படையாகவும் இருக்க இது உதவுகிறது. மேலும், ஓய்வூதியக் கணக்கீடுகள், குறிப்பிட்ட சம்பள குறியீடுகள் மற்றும் ஓய்வூதிய சதவீதத்திம் அகியவற்றிற்கமைய சுயமாக செய்யப்படுகின்றன, ஆகவே அவை சாதாரண முறையுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் மாற்றப்படலாம்.

திருத்தப்பட்ட ஓய்வூதியம் ஜூலை முதல் ஓய்வூதியத்தில் சேர்க்கப்பட்டுவதுடன் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அனைத்து ஓய்வூதியர்களின் ஓய்வூதிய மாற்றமும் பூர்த்தி செய்யப்பட்டு ஆரம்பிக்கப்படும் என ஓய்வூதியத் திணைக்களம் நம்பிக்கை கொண்டுள்ளது.

மேலும், புதிய சம்பள மாற்ற செயல்முறை குறித்து அரசு அலுவலர்களுக்கு அறுவுறுத்தல்களை வழங்கல் பொருட்டு தொடர் பயிற்சி திட்டங்களை ஓய்வதியத் திணைக்களம் நடாத்திவருகிறது. அதன்படி, மாவட்ட செயலக மட்டத்தில் பல பயிற்சி திட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.

பயிற்ச்சிப் பட்டறைகள் மற்றும் ஓய்வூதிய மாற்ற நிகழ்ச்சித் திட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்களின் சில புகைப்படங்கள் கீழே. .