pic 1
  2016.12.31 ஆம் திகதி வரை ஓய்வு பெற்ற ஆயுதப்படையினர் மற்றும் அவர்களின் விதவைகள் மற்றும் அனாதைகளின் ஓய்வூதியம் பெறுவோர் அடங்கலாக அனைத்து அரசு அலுவலர்களதும் ஓய்வூதியம் 2019 வரவு செலவு திட்டத்தின் படி 2017 அரசாங்க சம்பள கட்டமைப்பிற்கு இணையாகத் தீவின் அனைத்துப் பிரதேச செயலகங்களினூடாகவும் வெற்றிகரமாக மீளாய்வு செய்யப்பட்டதுடன் மீளாய்வில் சிக்கல்கள்களைக் கொண்ட ஓய்வூதியக் கோப்புகளைப் ஆய்வு செய்வதன் மூலம் தீர்வுகளை வழங்குதல் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்தால் ஒரு நிகழ்ச்சித் திட்டம் நடாத்தப்படுகிறது.

இந்த ஓய்வூதிய மீளாய்வுச் செயல்முறையை மிகவும் செயற்றிறனுடனும் வினைத்திறனுடனும் செயற்படுத்தும் நோக்கில் புதிய தகவல்த் தொழில்நுட்ப மென்பொருளை ஓய்வூதியத் திணைக்களம் அறிமுகப்படுத்தியதுடன் ஓய்வூதியக் கோவைகளில் உள்ள குறைபாடுகளின் விளைவாக தரவுத் தளத்திற்குள் தரவை துல்லியமாக உள்ளிட இயலாமையால் தோன்றும் பிரச்சினைகளும் இனங்காணப்பட்டன. அதற்கமைய, கொள்கைகள் மற்றும் சட்ட சூழ்நிலைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் ஆரம்ப அமர்வு மார்கழி மாதம் 16 ஆம் திகதி ஓய்வூதியத் திணைக்களக் கேட்போர் கூடத்தில் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் எட்வர்ட் பெரேரா மற்றும் ஓய்வூதிய பணிப்பாளர் புத்திகா அமல் ஜெயதிஸ்ஸ ஆகியோரின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது. மேலும் இந்த திட்டம் பல கட்டங்களில் தீவின் அனைத்து பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடாத்தப்படும்.  pic 1
 ஓய்வூதியத் திணைக்கள நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் ஓய்வூதியத் திணைக்கள வளாகத்தில் 2017.12.23 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு ஆண்டு இறுதி இசை நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.

ஆண்டு முழுவதும் பணிபுரியும் திணைக்கள அலுவலர்களின் மிகவும் பரபரப்பான மனநிலைக்கு ஒரு இடைவேளையை வழங்குமுகமாக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந் நிகழ்வை வண்ணமயமாக்க அலுவலர்கள் உட்பட ஏனைய அதிகாரிகளும் பாடல்களைப்பாடி தமது அதீத பங்களிப்பை நல்கினர். வருட இறுதியின் கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களாகிய இந் நாளில் ஓய்வூதியத் திணைக்கள அலுவலர்களது பிள்ளைகள் சார்பாக பாடல் நிகழ்ச்சிகள், குறும் படங்கள், கணனி பொழுது போக்கு விளையாட்டுகள் அடங்கலாக பல் வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன் பங்கேற்ற அனைத்து குழந்தைகள் மற்றும் அலுவலர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி. டயாஸ், மேலதிக பணிப்பாளர் நாயகம் கே.ஆர்.பத்மபிரிய உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் இந் நிகழ்வில் பங்கேற்றதுடன் இப் பொழுதுபோக்கு நிகழ்வை திணைக்கள நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.   

 

pic 1

 

 

 


  

 

 

 

 

ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் ஓய்வூதியர்களால் பூரணப்படுத்தி சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஓய்வூதிய வாழ்க்கைச் சான்றிதழுடன்  சம்பள விபரம் அடங்கிய ஆவணங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

 

அதற்கமைய,  கிராம சேவகர் ஊடாக பொருத்தமான  ஆவணங்கள் ஓய்வு பெற்ற அலுவலர்களுக்குத் தபால் மூலம் பிரதேச செயலகங்களால் விநியோகிக்கப்படும். அத்துடன் எவ்வித கட்டணமும் இன்றி வாழ்க்கைச் சான்றிதழை ஓய்வூதிய திணைக்களத்தின் அலுவலக இணைய முகவரி  www.pensions.gov.lk ஊடாகவோ அல்லது தங்கள் பிரிவிற்குரிய பிரதேச செயலகங்களினூடாகவோ பெற்றுக் கொள்ள முடியும். வாழ்க்கைச் சான்றிதழ்களைப் பெறும்போது வெளிப்புறக் தலையீடோ அல்லது பணம் செலுத்த வேண்டிய அவசியமோ இல்லை என்பதை ஓய்வூதியத் திணைக்களம் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வலியுறுத்திக் கூறுகிறது. பூரணமாக நிரப்பப்பட்ட வாழ்க்கைச் சான்றிதழ் கிராம சேவகரால் சான்றளிக்கப்பட்டு 2020.03.31 ஆம் திகதிக்கு முன்பதாக உங்கள் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன் அத்திகதிக்கு முன் தங்கள் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பிக்காத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் 2020 மே மாதம் முதல் நிறுத்திவைக்கப்படும் என ஓய்வூதியப்பணிப்பாளரின் 2019.12.06 ஆம் திகதிய  ஓய்வு/ மா.செ / வா.சா/ 2020  ஆம் இலக்க  கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரதேச செயலகம் அல்லது மாவட்ட செயலகத்தின் ஓய்வூதிய பிரிவில் இருந்து மேலதிக தகவல்களை நேரடியாக பெற்றுக்கொள்ளமுடியும்.