ஜனாதிபதி செயலணி மற்றும் ஜனாதிபதி செயலகம் இணைந்து செயற்படுத்தும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஓய்வூதியத் திணைக்களம் 2025 ஆம் ஆண்டின் புதிய வருடத்திற்கான கடமைகளை இன்று (2025 ஜனவரி 1 ஆந் திகதி) ஆரம்பித்துள்ளது.
திணைக்கள அலுவலர்கள் புதிய ஆண்டிற்கான அரச சேவைப் பிரமாணத்தினை மேற்கொண்டு, தேசிய மற்றும் ஓய்வூதியத் திணைக்கள கொடியினை ஏற்றிவைத்து, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்து புத்தாண்டு கடமைகளை ஆரம்பித்தனர். மேலும் புதிய ஆண்டின் முதல் நாள் மதச் சடங்குகள் மற்றும் பிரித் நிகழ்வுடன் தொடங்கியது.
அதன் பின்னர், மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி. சுஜானி பெத்தவடு அவர்கள் ஓய்வூதிய திணைக்களத்தின் அலுவலர்கள் மற்றும் அனைவருக்கும் பிரதேச செயலகங்களில் பணிபுரியும் ஓய்வூதிய திணைக்கள அலுவலர்கள் 2024 ஆம் ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஓய்வூதியர்கள் மற்றும் தங்கிவாழ்வோர் அனைவருக்கும் சரியான நேரத்தில் ஓய்வூதியக் கொடுப்பனவினை உறுதி செய்வதகான அயாராத உழைப்பிற்கு நன்றி தெரிவித்தமையுடன் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திணைக்களமானது சிவில் அலுவலர்கள், முப்படை உறுப்பினர்கள் மற்றும் விதவைகள்/அநாதைகள் உட்பட 43,472 புதிய ஓய்வூதிய சலுகைகளை செயற்படுத்தியுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டு அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் அலுவலர்களின் ஓய்வூதியத்தினை செயல்படுத்த ஒவ்வொரு ஓய்வூதியக் கோப்பினையும் கருணையுடன் அணுகுமாறு அனைத்து அலுவலர்களிடமும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற “தூய்மையான இலங்கை” தேசிய நிகழ்வின் நேரடி ஒளிபரப்புடன் இணைந்து “தூய்மையான இலங்கை” பிரஜாவுரிமை உறுதிமொழியும் வழங்கப்பட்டது.