எமது திணைக்களம் ஓய்வூதியதாரர்களுடைய ஆவணங்கள் மற்றும் அவர்களுடனான தொடர்பாடல் சேவைகளை மிகவும் விரைவாகவும், அர்ப்பணத்துடனும் ஓய்வூதிய சமுகத்திற்கு வழங்க உறுதிபூண்டுள்ளது.

மேற்கண்ட நோக்கத்தை மையமாகக் கொண்டு, பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக வாரத்தில் திங்கள் கிழமை மற்றும் புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்களை மட்டுமே ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வாரத்தின் ஏனைய நாட்களை உள்ளக அலுவலகப் பணிகளுக்காக ஒதுக்குவதன் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் தரமான சேவைகளை வழங்க உத்தேசித்துள்ளேன்.

இதற்கு உங்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி, திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே அலுவலர்களைச் சந்திக்க எமது திணைக்களத்திற்கு வருமாறு வினயமுடன் வேண்டி நிற்கிறேன்.

சாமிந்த ஹெட்டியாரச்சி

ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம்

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline