பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் கலாநிதி. ஏ.எச்.எம்.எச். அபேரத்ன அவர்கள் ஓய்வூதியத் திணைக்களத்தினை மேற்பார்வை செய்கின்றார்.
ஓய்வூதியத் திணைக்களத்தின் கீழ் உள்ள மத்திய, பரவலாக்கப்பட்ட, விதவைகள் மற்றும் அநாதைகள், தகவல் தொழிநுட்ப, கொள்கை, முப்படை சேவைகள், வெளிநாட்டு ஓய்வூதியம், பங்களிப்பு, உள்ளக கணக்கீடு, கணக்கு, கட்டுப்பாடு, 1970 தொலைபேசி சேவை மற்றும் ஆவண காப்பகம் ஆகிய கிளைகள் யாவும் கொளரவ அமைச்சரின் மேற்பார்வையின் கீழ் இயங்குகின்றன. அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற சிவில் மற்றும் முப்படை சேவையினை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் அவர்களில் தங்கிவாழ்வோரின் ஓய்வூதியக் கொடுப்பனவு சலுகைகளை வழங்குவதற்காக இக் கிளைகள் திணைக்களத்தினால் உருவாக்கப்பட்டுள்ள வழிமுறைகள் ஊடாக செயல்படுத்துகின்றன.
ஏற்கனவே ஓய்வூதிய தரவு முகாமைத்துவ முறைமை(PMS) மூலம் இணையவழி ஊடாக ஓய்வூதியக் கொடுப்பனவின் பல்வேறு படிமுறைகள் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன.
இதனை முன்னெடுத்து சென்றமைக்காக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் திரு. ஏ. ஜகத் டீ. டயஸ் மற்றும் தலைமை அலுவலகம் மற்றும் நடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் பணிபுரிவும் அலுவலர்களுக்கு அமைச்சர் நன்றியினை தெரிவித்தார்.
மேலும், திணைக்களத்தின் விதவைகள் மற்றும் அநாதைகள் அடங்கலாக வருடாந்தம் ஓய்வூதியம் பெறும் 40,000 இற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களிற்கான சேவைகளை இலகுபடுத்த தகவல் தொழிநுட்ப பிரிவினால் திட்டமிடப்பட்டுள் இணையவழி ஊடான திட்டத்தினை விரைவாக தொடங்குவதற்கு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.
முதன்மை சமூகப் பாதுகாப்பான ஓய்வூதிய முறையின் நிலைத்தன்மையினை உறுதிப்படுத்தும் வகையில் புதிய கொள்கைகளை வகுப்பதுடன் நீண்ட காலமாக உள்ள கொள்கைகளை திருத்தி அமைப்பது குறித்தும் புதிய அரசாங்கம் கவனம் செலுத்தும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி. ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஆலோக பண்டார, ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் திரு. ஏ. ஜகத் டீ. டயஸ், மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி. சுஜானி பெத்தவடு மற்றும் சில அலுவலர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.