இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகிய மூன்று ஆயுதப் படைகள் நிறுவப்பட்டுள்ளன. 17 ஆம் இலக்க 1949 ஆம் ஆண்டின் இராணுவச் சட்டம், 41ஆம் இலக்க 1949 ஆம் ஆண்டின் விமானப்படைச் சட்டம் மற்றும் 34 ஆம் இலக்க 1950 ஆம் ஆண்டின் கடற்படைச் சட்டம் ஆகியவற்றால் நிறுவப்பட்ட ஏற்பாடுகளுக்கமையவும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்பவும் முப்படையினருக்கும் ஆயுதப்படை சேவைகள் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

இராணுவ சட்டத்தின் 29 மற்றும் 155 பிரிவுகளின் படி உருவாக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டின் இராணுவப் பணிக்கொடை ஓய்வூதிய சட்டக் கோவை, விமானப்படைச் சட்டத்தின் பிரிவு 29 மற்றும் 155 ஆம் பிரிவுகளின்  படி உருவாக்கப்பட்ட விமானப்படை பணிக்கொடை ஓய்வூதிய சட்டக் கோவை மற்றும் கடற்படை சட்டத்தின் 161 ஆம் பிரிவால் உருவாக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டின் கடற்படை ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை சட்டக் கோவை ஆகியவை ஆயுதப் படைகளின் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் முக்கிய சட்ட ஆதாரங்கள் ஆகும்.

 

ஆயுத சேவைகள் பிரிவு மூலம் வழங்கப்படும் ஓய்வூதியம்

 

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline