இந்த ஓய்வூதியம் ஆண்/பெண் அரச அலுவலருக்கு பிறந்து, பிறக்கும்போதே நிரந்தர உடல் அல்லது உள ஊனமுற்ற குழந்தைகளுக்கு அல்லது 26 வயதை அடையும் முன் ஊனமுற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நோக்கத்திற்காக, 2011.08.15 ஆம் திகதிய 1719/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின்   மூலமும், 1981 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதிய (திருத்தம்) சட்டத்தின் 11 ஆம் பிரிவின் மூலமும் முந்தைய 29 ஆம் பிரிவுக்காக புதிய 29 ஆம் பிரிவைச் சேர்த்து பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“29 அ. 'சுகாதார சேவைகள் பணிப்பாளரால் நியமிக்கப்பட்ட மூன்று மருத்துவ அதிகாரிகளைக் கொண்ட மருத்துவக் குழுவால், அனாதை உடல் அல்லது உள ஊனத்தால் அவதிப்படுவதால், அவர் வாழ்வாதாரத்தை ஈட்ட இயலாது என்று முடிவு செய்தால், அத்தகைய அனாதைக்கு வயதைப் பொருட்படுத்தாமல் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் உரிமை உண்டு.’

மேலும், மேலே குறிப்பிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியச் சட்டத்தின் 7 பிரிவுக்கும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வழிமுறை
  • சேவையில் இருக்கும் போது இறந்த அலுவலர்களின் மரணத்தின் பின்னரான பலன்களைப் பெறுவதற்காக ஒரு விதவை/ தபுதாரர் உயிருடன் இல்லை என்றால், அவர்களது அனாதை பிள்ளைகள் இருந்தால், பங்களிப்பாளருக்கு பிறந்த அனாதைகள் பிள்ளைகளுக்கு அனாதை ஓய்வூதியத்திற்கான உரிமையை வழங்க முடியும் என்று கருதப்படுகிறது.
  • மேலும், ஓய்வூதியம் பெறும் ஒரு ஆண்/பெண் ஓய்வூதியர் இறந்துவிட்டால், வி&அஓ க்கான உரிமை விதவை/ தபுதாரர் வழங்கப்படுவதுடன் மற்றும் விதவை/ தபுதாரர் இறந்த பின்னர் அனாதைப் பிள்ளைகளுக்கு வழங்கப்படுகிறது.
  • பிரதேச செயலகத்தால் பராமரிக்கப்படும் ஓய்வூதியக் கோவை, ஊனமுற்ற அனாதைகளுக்கான பிடி4 விண்ணப்பத்துடன், 01/2009 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை, சுகாதாரம் 309 அறிக்கை, 26 வயதிற்கு முன்பே ஊனம் ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கைகள், பாதுகாவலரின் பரிந்துரை மற்றும் முடிவுகளுடன் கூடிய அறிக்கை மற்றும் பூர்வாங்க பரிசோதனைக்குப், பரிந்துரைகள் மருத்துவ அறிக்கைகளின்படி பூர்த்தி செய்யப்பட்ட ஊனமுற்ற விண்ணப்பம் 1 ஆகியவற்றுடன் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • தாய் மற்றும் தந்தை இருவரும் வி&அஓ திட்டத்தின் பங்களிப்பாளர்களாக இருந்தால், இருவரின் உரிமையும் அனாதைக்கு வழங்கப்படுகிறது.
  • 2014.02.25 ஆம் திகதிய ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்தின் முடிவின்படி, தாய் மற்றும் தந்தையின் உயர்வான சம்பளம் முழுமையாகவும் அத்துடன் குறைந்த சம்பளத்தில் இருந்து 50% உம் சேர்த்து வழங்கப்படும்.
  • 2014.08.25 ஆம் திகதிய கொள்கை முடிவு /14/05/06 ஆம் இலக்க 2014.08.25 ஆம் திகதிய இன் அடிப்படையில், மருத்துவ சபையின் பரிந்துரை வழங்கப்பட்ட திகதியின் அடிப்படையில் பிறந்த ஊனமுற்ற குழந்தைகளுக்கு கொடுப்பனவு செலுத்தத் தொடங்கப்படுகிறது.
விண்ணப்ப செயல்முறையில் நிறுவனத்தின் பங்கு

10 2

திணைக்களம் பின்பற்ற வேண்டிய செயல்முறை

10 3

இந்த நோக்கத்திற்கு தேவையான ஆவணங்கள்
  • பிடி 4 விண்ணப்பம்
  • ஆயுதப் படைகளின் விண்ணப்பம் (ஆண்/பெண் பங்களிப்பாளர் ஆயுதப்படையில் இருந்தால்)
  • ஆயுதப் படைகளின் விண்ணப்பம் (ஆண்/பெண் பங்களிப்பாளர் ஆயுதப்படையில் இருந்தால்)
  • பங்களிப்பாளரின் மரணச் சான்றிதழ்
  • வாழ்க்கைத் துணையின் மரணச் சான்றிதழ்
  • பங்களிப்பாளரின் பிறப்பு சான்றிதழ்
  • வாழ்க்கைத் துணையின் பிறப்பு சான்றிதழ்
  • திருமணச் சான்றிதழ்
  • அனாதையின்/களின் பிறப்பு சான்றிதழ்
  • அனாதையின்/களின் தெ.அ.அ இன் சான்றளிக்கப்பட்ட பிரதி*
  • பாதுகாவலரின் தெ.அ.அ இன் சான்றளிக்கப்பட்ட பிரதி*
  • அனாதையின்/களிற்கு கொடுப்பனவு செய்யப்படின் அனாதையின்/களின் வங்கி புத்தகத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் *
  • அனாதையின்/களிற்கு பாதுகாவலரின் கீழ் கொடுப்பனவு செய்யப்படின் பாதுகாவலரின் வங்கி புத்தகத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் *
  • சுகாதார அறிக்கை 307
  • 26 வயதுக்கு முன்னரான மருத்துவ அறிக்கைகள்
  • பிரதேச செயலாளரால் நடத்தப்பட்ட விசாரணையின் ஆரம்ப அறிக்கை மற்றும் அவரது பரிந்துரை
  • முதல் ஓய்வூதிய கோவை
  • பங்களிப்பாளரின் பெயரில் ஏதேனும்வேறுபாடு இருந்தால், அதில் உள்ள வேறுபாடு குறித்த சரியான உறுதிப்படுத்தல்
  • பங்களிப்பாளர் அல்லது வாழ்க்கைத் துணை முந்தைய திருமணம் செய்துகொண்டால், அத்தகைய திருமணங்களின் பின்வரும் ஆவணங்களின் முதல் நகல்
    • திருமண சான்றிதழ்கள்
    • திருமணம் முறிந்தமையை நிரூபிக்கும் விவாகரத்துச் சான்றிதழ்கள் (கண்டிய மற்றும் முஸ்லிம் திருமணங்களுக்கு)
    • விவாகரத்தின் முற்றான தீர்வை
    • இறப்பு சான்றிதழ்
  • குழந்தைக் காப்பகங்களில் ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால், அது தொடர்புடைய விவரங்கள்
    • செலவுக்கான மாதாந்த மதிப்பீடு
    • அத்தகைய குழந்தைக் காப்பகங்கள் அரசாங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள்
  • ஊனமுற்ற குழந்தையின் முழு அளவிலான புகைப்படம்
  • ஊனமுற்ற பிள்ளை திருமணமாகி இருந்தால், பிள்ளையின் வருமானம்/ சொத்துக்கான உரிமை/ குடும்பத்தின் வருமானம் குறித்து கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் பிரதேச செயலாளரின் அறிக்கை.

*கிராம உத்தியோகத்தரால் சான்றளிக்கப்பட வேண்டும்.

*வங்கிக் கணக்கு தனிப்பட்ட மற்றும் சேமிப்புக் கணக்காக இருக்க வேண்டும்.

பயன்படுத்தப்படும் சட்டங்கள், கட்டளைச் சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகள்
பயன்படுத்தப்பட்ட வகை குறியீட்டு இலக்கங்கள்
  • விதவைகள் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியம் - 24
  • தபுதாரர்கள் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியம் - 28
  • ஆயுதப்படைகளின் ஊனமுற்றோர் ஓய்வூதியம் - 42
  • ஆயுதப்படைகளின் தபுதாரர்கள் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியம் - 46

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline