விதவை/ தபுதாரர்கள் மற்றும் அனாதை ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்யும் செயல்முறை தொடக்கம் விதவை/ தபுதாரர்கள் மற்றும் அனாதை ஓய்வூதியத் திட்டத்தில் அனாதை ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் ஊனமுற்றோர் அனாதை ஓய்வூதிய கொடுப்பனவு ஆகியவற்றை அவர்களின் பயனாளிகளுக்கு வழங்குவது வரை அரசு ஊழியர்கள் இந்தப் பிரிவின் கீழ் பலன்களைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள்.
அறிமுகம்
ஓய்வூதியத் திணைக்களத்தின் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியப் பிரிவு, பொதுச் சேவையில் உள்ள விதவைகள்/ தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்குப் பலன்கள் வழங்குவது தொடர்பான பணிகளைச் செய்கிறது. சிவில் மற்றும் ஆயுதப்படைகளின் விதவைகள்/ தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியங்களுடன் மெலதிகமாக, விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய பிரிவு ஊனமுற்ற அனாதைகளுக்கான ஓய்வூதியம் வழங்கல், சிவில் மரணப் பணிக்கொடை வழங்கல் மற்றும் விதவைகள்/ தபுதாரர்கள் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியத் திட்டத்தில் பொது அலுவலர்களை பதிவு செய்வதற்கான செயல்முறைகளை செயல்படுத்துகிறது.
சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்கள்
- 01 ஆம் இலக் 1898, விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதிய கட்டளைச்சட்டம்
- 13 ஆம் இலக் 1906, விதவைகள் மற்றும் அனாதைகள் (திருத்தம்) சட்டம்
- 24 ஆம் இலக் 1983, தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியச் சட்டம்
- 44 ஆம் இலக் 1981, விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதிய (திருத்தம்) சட்டம்
- 57 ஆம் இலக் 1998, விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம்
- 08 ஆம் இலக் 2010, விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதிய (திருத்தம்) சட்டம்
- 19 ஆம் இலக் 1985, தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய (திருத்தம்) சட்டம்
- 16 ஆம் இலக் 1987, தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம்
- 56 ஆம் இலக் 1998, தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம்
- 65 ஆம் இலக் 1998, தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம்
- 02 ஆம் இலக் 2001, தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம்
- 09 ஆம் இலக் 2010, தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம்
விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியப் பிரிவு
எங்களுடன் இணைய.
தொ.பே.இல | +94 112 332 346 |
மின்னஞ்சல் | +94 112 432 214 |
மின்னஞ்சல் | |
முகவரி | விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியப் பிரிவு, ஓய்வூதியத் துறை, புதிய செயலக கட்டிடம், மாளிகாவத்தை, கொழும்பு 10. |