பின்னணி
  • 08 ஆம் இலக்க 2010 ஆம் ஆண்டின் விதவைகள் மற்றும் அனாதைகள் (திருத்தம்) சட்டம் 09 ஆம் இலக்க 2010 ஆம் ஆண்டின் தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் சட்டத்தின். மூலம் மீண்டும் திருமணம் செய்த விதவைகள் / தபுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தில் 50% உரிமையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விடயத்தில் 13/2010 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை 7 ஆம் பிரிவு பயன்படுத்தப்படுகிறது மற்றும் அதற்கேற்ப 03/2013 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை மூலம், முந்தைய திருமணத்தின் அனாதைகளின் உரிமைகளைப், ஏவரேனும் இருந்தால், (ஆண்/பெண் பங்களிப்பாளரின் சட்டப்பூர்வ குழந்தைகளுக்கு) அவர்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் மீண்டும் திருமணம் செய்யும் விதவை / தபுதாரர்களுக்கு, விதவைகள் / தபுதாரர்கள் ஓய்வூதியத்தில் பாதியை வழங்க வேண்டும்.
  • 13/2010 ஆம் இலக்க சுற்றறிக்கை நடைமுறைக்கு வந்த 2010.08.17 ஆம் திகதிக்கு முன் விதவை/ தபுதாரர் மறுமணம் செய்திருந்தால், 03/2014 ஆம் இலக்க ஓய்வூதியச்.சுற்றறிக்கைக்கமைய 50% பலனைப் பெறுவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கக் கொடுக்கப்பட்ட கடைசிச் சந்தர்ப்பம் 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
  • விதவைகள் / தபுதாரர்கள் ஓய்வூதிய பலன்களை கோரும் நேரத்தில் ஒரு விதவைகள் / தபுதாரர்கள் மற்றொரு திருமணம் செய்து கொண்டால், ஆண் / பெண் பங்களிப்பாளர் இறந்த திகதியிலிருந்து பெறப்படாத செலுத்தப்பட வேண்டிய சம்பளத்தில் பாதி வழங்கப்படுகிறது, மற்றும் ஆண்/பெண் பங்களிப்பாளருக்குச் சட்டப்பூர்வ அனாதைகள் இருந்தால், அனைத்து நிலுவைத் தொகையும் அனாதைகளின் பெயரில் கணக்கில் வைப்பிடப்பட வேண்டும் மேலும் 100% விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் அனாதைகளுக்கு வழங்கப்படுகிறது. அனாதைகள் ஓய்வூதியம் வழங்குவது 26 வயது நிறைவடைந்ததும் அல்லது வேலைவாய்ப்பைப் பெற்றதும் எது முதலில் நிகழ்கிறதோ, அத்திகதியில் இருந்து நிறுத்தப்படும், மேலும் விதவைகள்/ தபுதாரர்கள் அனாதைகள் ஓய்வூதியத்தில் 50% வழங்குவது தொடலர்பில் கருத்தில் கொள்ளப்படுகிறது.
  • மேலும், விதவைகள் / தபுதாரர்கள் இரண்டாவது திருமணத்தை விவாகரத்து செய்யும் சந்தர்ப்பத்தில், விதவைகள் / தபுதாரர்கள் ஓய்வூதியத்தின் 50% மட்டுமே அவருக்கு வழங்கப்படும்.
வழிமுறை
  • விதவைகள் / தபுதாரர்கள் ஓய்வூதியம் பெறும் போது மறுமணம் செய்து கொண்டால், 13/2010 இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கைய்யின் படி, அந்தக் குறிப்பிட்ட திருமணத்தின் திகதியிலிருந்து விதவைகள் / தபுதாரர்கள் ஓய்வூதியத்தில் 50% பெறுவதற்கான உரிமை வழங்கப்படுகிறது.
  • இது சம்பந்தமாக, 01 ஆம் இலக்க 1898 ஆம் இலக்க விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய கட்டளைச் சட்டத்தின் 34 ஆம் பிரிவு மற்றும் 23 ஆம் இலக்க 1983 ஆம் இலக்க தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் சட்டத்தின் 18 ஆம் பிரிவு ஆகியவை இரத்து செய்யப்பட்டு, 08 ஆம் இலக்க 2010 ஆம் இலக்க விதவைகள் மற்றும் அனாதைகள் (திருத்தம்) சட்டத்தின் 06 ஆம் பிரிவின் கீழும் மற்றும் 09 ஆம் இலக்க 2010 ஆம் இலக்க தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் (திருத்தம்) சட்டத்தின் 04 ஆம் பிரிவின் கீழும் பின்வரும் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
08 ஆம் இலக்க 2010 ஆம் ஆண்டின் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய (திருத்தம்)

" 6. முதன்மைச் சட்டத்தின் 34 வது பிரிவு இதன்மூலம் இரத்து செய்யப்படுகிறது அத்துடன் பின்வரும் புதிய பிரிவு இதனகத்துப் பின்னர் மாற்றப்படுகிறது :-

34. (1) ஒரு பங்களிப்பாளரின் விதவை, அவருடைய மறுமணத்தில், அத்தகைய அடுத்தடுத்த திருமணத்தின் திகதிக்குப் பிறகு ஓய்வூதியமாக -

  • (அ) அத்தகைய திருமணத்தின் போது அவர் பெற்ற ஓய்வூதியத்தின் பாதி அளவு அல்லது
  • (ஆ) ஓய்வூதியம் பெறுவதற்கு அவர் உரிமை பெற்றிருந்தால், ஆனால் அது உண்மையான பெறுகை இல்லை என்றால், அத்தகைய அடுத்தடுத்த திருமணத்திற்கு முன்பு விதவையாக அவர் பெற வேண்டிய தொகையில் பாதி

வழங்கப்பட வேண்டும் -

(2) விதவையின் முதல் திருமணத்தின் குழந்தைகள், மேலே உள்ள பந்தி (அ) அல்லது (ஆ) அடிப்படையில் விதவைக்கு கொடுப்பனவு செய்த பிறகு விதவை பெற்ற ஓய்வூதியத்தின் மீதமுள்ள பகுதியைப் பெறுவார்கள்.

(3) அத்தகைய அடுத்தடுத்த திருமணத்தின் வாழ்க்கைத்துணை நிதியத்துக்கு பங்களிப்பவராக இருந்தால் மற்றும் அத்தகைய வாழ்க்கைத்துணை இறந்தவுடன் அத்தகைய வாழ்க்கைத் துணையால் நிதியத்துக்கு அளிக்கப்பட்ட பங்களிப்புகள் தொடர்பாக ஓய்வூதியம் பெற உரிமை உண்டு, துணைப்பிரிவு (1) இன் பந்தி (அ) மற்றும் (ஆ) இன் அடிப்படையில் அவர் ஓய்வூதியமாகப் பெற்றுக்கொண்டிருக்கும் அத்தகைய தொகையை அடுத்தடுத்த திருமணத்தின் வாழ்க்கைத் துணை இறந்த திகதியிலிருந்து நிறுத்தப்படும்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, அத்தகைய ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்படுவதற்கு முன், வாழ்க்கைத்துணையின் முதல் திருமணத்தின் குழந்தைகள், தங்கள் தாயின் அடுத்தடுத்த திருமணத்தின் வாழ்க்கைத்துணை இறந்த திகதியிலிருந்து, துணைப்பிரிவு (2) மற்றும் துணைப்பிரிவு (1) இன் அடிப்படையில் அத்தகைய முடிவுறுத்தலுக்கு முன் அவர்களின் தாயார் பெறும் பங்குகளின் அடிப்படையில் அவர்கள் பெறும் பங்குகளைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள்:

மேலும், அத்தகைய அடுத்தடுத்த திருமணம் கலைக்கப்பட்டால், விதவை, துணைப்பிரிவு (1) இன் படி அவர் பெற்ற பாதிப் பங்கை ஓய்வூதியமாகப் பெறுவதற்குத் தகுதியுடையவர் மற்றும் துணைப்பிரிவு (2) இன் கீழ் குழந்தைகளின் உரிமைகள் மாறாமல் இருக்கும்.”

09 ஆம் இலக்க 2010 ஆம் ஆண்டின் தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய (திருத்தம்) சட்டம்.

“4. முதன்மைச் சட்டத்தின் 18வது பிரிவு இதன்மூலம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக பின்வரும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது:-

18. (1) ஒரு பங்களிப்பாளரின் தபுதாரர் தனது மறுமணத்தில் அத்தகைய அடுத்தடுத்த திருமணத்தின் திகதிக்குப் பிறகு –

  • (அ) அத்தகைய திருமணத்தின் போது அவர் பெற்ற ஓய்வூதியத்தின் பாதி அளவு அல்லது,
  • ஆ) ஓய்வூதியம் பெறுவதற்கு அவர் தகுதியுடையவராக இருந்தாலும், அதற்கான உண்மையான பெறுகை இல்லை என்றால், அத்தகைய அடுத்தடுத்த திருமணத்திற்கு முன்பு விதவையாக அவர் பெற வேண்டிய தொகையில் பாதி அளவு,

ஓய்வூதியமாகப் பெறுவார்,

(2) விதவையின் முதல் திருமணத்தின் குழந்தைகள், துணைப்பிரிவு 1 இன் பந்தி (அ) அல்லது (ஆ) இன் அடிப்படையில் விதவைக்கு செலுத்தப்பட்ட பிறகு, விதவை பெற்ற ஓய்வூதியத்தின் மீதமுள்ள பகுதியைப் பெறுவார்கள்.

(3) அத்தகைய அடுத்தடுத்த திருமணத்தின் வாழ்க்கைதுணை நிதியத்துக்கு பங்களிப்பவராக இருந்தால், அத்தகைய வாழ்க்கைதுணை இறந்தவுடன், அத்தகைய வாழ்க்கைதுணை ஓய்வூதியத் திட்டத்திற்குச் செய்த பங்களிப்புகளைப் பொறுத்து ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு அத்தகைய விதவைக்கு உரிமை இருந்தால், துணைப்பிரிவு (1) இன் பந்தி (அ) மற்றும் (ஆ) ஆகியவற்றின் அடிப்படையில் அவர் ஓய்வூதியமாகப் பெற்றுக்கொண்டிருக்கும் தொகை அத்தகைய அடுத்தடுத்த திருமணத்தின் அத்தகைய மனைவியின் இறந்த திகதியிலிருந்து நிறுத்தப்படும்.:

மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட்டால், அத்தகைய நிறுத்தத்திற்கு முன், விதவையின் முதல் திருமணத்தின் குழந்தைகளுக்கு, துணைப்பிரிவு (2) இன் விதிமுறைகள் மற்றும் துணைப்பிரிவு (1) இன் அடிப்படையில் அவர்களின் தந்தை பெற்றுக் கொண்ட தொகை, தங்கள் தந்தையின் அடுத்தடுத்த திருமணத்தின் வாழ்க்கைதுணை இறந்த திகதியிலிருந்து, அக் குழந்தைகளுக்கான பங்குகளைப் பெற உரிமை உண்டு.:

மேலும், அத்தகைய அடுத்தடுத்த திருமணம் கலைக்கப்படும் பட்சத்தில், துணைப்பிரிவு (1) இன் படி அவர் பெற்ற பாதிப் பங்கை ஓய்வூதியமாகப் பெற விதவை தகுதியுடையவர் மற்றும் துணைப் பிரிவு (2) இன் கீழ் குழந்தைகளின் உரிமை மாறாமல் இருக்கும்.”

  • 3. வாழ்க்கைத்துணை மறுமணம் செய்து கொண்ட நாளிலிருந்து, விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்தில் 50% அல்லது தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்தில் 50% பெறுவதற்கான உரிமை வழங்கப்படுகிறது.
இந்த நோக்கத்திற்கு தேவையான ஆவணங்கள்
  • பிடி 4 விண்ணப்பம்
  • பங்களிப்பாளரின் இறப்புச் சான்றிதழ்
  • பங்களிப்பாளரின் பிறப்பு சான்றிதழ்
  • வாழ்க்கைத் துணையின் பிறப்புச் சான்றிதழ்
  • திருமணச் சான்றிதழ்
  • பங்களிப்பாளரின் தெ.அ.அ இன் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • வாழ்க்கைத் துணையின் தெ.அ.அ இன் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • வாழ்க்கைத் துணையின் சேமிப்புக் கணக்கின் (தனிநபர்) வங்கி புத்தகத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • பங்களிப்பாளரின் பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், நிறுவனத் தலைவரால் வழங்கப்படும் முறையான உறுதிப்படுத்தல்
  • வாழ்க்கைத் துணையின் பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், வேறுபாடுகளை உறுதிப்படுத்த ஒரு சத்தியக் கடிதம் அல்லது சட்ட ஆவணங்கள்.
  • பங்களிப்பாளர் அல்லது மனைவிக்கு முந்தைய திருமணங்கள் இருந்தால்,
    • திருமண சான்றிதழ்கள்
    • திருமணம் முறிந்தமையை நிரூபிக்கும் விவாகரத்துச் சான்றிதழ்கள் (கண்டிய மற்றும் முஸ்லிம் திருமணங்களுக்கு)
    • விவாகரத்தின் முற்றான தீர்வை
    • இறப்பு சான்றிதழின் பிரதி
  • பங்களிப்பாளரின் முந்தைய திருமணங்களில் இருந்து பிறந்த 26 வயதுக்குட்பட்ட வேலையில்லாத பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் அவர்களின் வங்கி விவரங்கள்
  • 18 வயதுக்கு மேற்பட்ட அனாதைகளின் வேலை/ வேலையின்மையை நிரூபிக்கும் ஆவணங்கள்
  • விதவை/ தபுதாரர்கள் குடியியல் நிலை குறித்த அறிக்கைகள் (பிரதேச செயலாளரால் கண்டிப்பாக மேலொப்பமிடப்பட வேண்டும்)
விண்ணப்ப செயல்முறையில் தொடர்புடைய நிறுவனங்களின் பங்கு

விதவை/ தபுதாரர்கள் ஓய்வூதியம் பெறுபவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும்போது, விண்ணப்பம் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தினூடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் விதவை/ தபுதாரர்கள் ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருப்பவர்களின் விண்ணப்பங்கள் ஆண்/ பெண் பங்களிப்பாளர் கடைசியாக பணியாற்றிய நிறுவனம் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  8 1

பிரதேச செயலகங்களுக்குப் பொறுப்பான மற்றும் சேவையாற்றும் உத்தியோகத்தர்கள் எந்தவொரு பிரச்சினையும் இல்லாத கோவைகளுடன் இணைக்கப்பட்ட விண்ணப்பங்களை பி.சே வலைவாசல் முறைமை மூலம் தமது அணுகலைப் பயன்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும். 

பெயர் வேறுபாடுகள், மறுமணங்கள் குறித்து தெரிவிக்காமல் மிகைக்கொடுப்பனவாக வி&அஓ பெறுதல், வதிவிடங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற பிரச்சனைகள் உள்ள கோவைகள் தொடர்பான விண்ணப்பங்கள் சுற்றறிக்கையின் கீழ் இயங்கலை அல்லாத முறை மூலம் ஓய்வூதியத் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்

பயன்படுத்தப்படும் சட்டங்கள், கட்டளைச் சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகள்
பயன்படுத்தப்பட்ட வகை குறியீடு இலக்கங்கள்
  • மீண்டும் திருமணம் செய்து கொண்ட ஆயுதப்படைகளின் விதவைகள் - 60
  • மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் குடியியல் விதவைகள் - 61
  • மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் தபுதாரர்கள் - 62

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline