பொது சேவையில் நிரந்தர மற்றும் ஓய்வூதிய உரித்துடைய பதவியை வகிக்கும் அனைத்து அரச அலுவலர்களும் வி&அஓ திட்டத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
பின்னணி
- 1891 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதிய கட்டளைச் சட்டத்தின் மூலம் அரச சேவையில் உள்ள அலுவலர்களின் விதவைகள் மற்றும் அனாதைகளுக்கு அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஓய்வூதியம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், 1983 ஆம் ஆண்டுக்கு முன், பொதுச் சேவையில் உள்ள ஆண் அலுவலர்கள் மட்டுமே வி&அஓ திட்டத்தின் கட்டாயப் பங்களிப்பாளர்களாக இருந்தனர்.
- எவ்வாறாயினும், பொது சேவையில் பெண் அலுவலர்களின் அதிகரிப்புடன் வி&அஓ திட்டத்தில் பங்களிப்பதற்கான வாய்ப்புகள் பொது சேவையில் உள்ள பெண் அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. 1983 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், இதுவரை ஆண் அலுவலர்களுக்கு மட்டுமே இருந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிக்கும் வாய்ப்பு தற்போது பெண் அலுவலர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது
- 03. எவ்வாறாயினும்,1983.08.01 இல் அரச சேவையில் இருந்த பெண் உத்தியோகத்தர்கள், மேற்கூறிய திகதிக்கு முன்னர் நியமனம் பெற்றிருப்பினும், அவர்களின் விருப்பத்தின் பேரில் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
231 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையால் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னிணைப்பான 'அ' மூலம் அவர்களின் விருப்பம்/ விருப்பமின்மையை கட்டாயமாக வெளிப்படுத்த வேண்டும். மேலும், திட்டத்தில் உறுப்பினராக விருப்பத்தை பயன்படுத்தாத பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு,291 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை மூலம் தனது விருப்பத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த வாய்ப்பு 1986.05.10 அன்று காலாவதியாகும். எவ்வாறாயினும், பெண் உத்தியோகத்தர்களுக்கு தமது விருப்பத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவ்வப்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், 03/2014 ஆம் இலக்க இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கையின் ஊடாக அவ்வாறான சந்தர்ப்பம் மேலும் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான காலக்கெடுவும் 2014.12.31 அன்றுடன் நிறைவடைந்துள்ளது. - விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதியானது 1898 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதிய கட்டளைச் சட்டத்தின் 03 ஆம் பிரிவால் பின்வரும் முறையில் விளக்கப்பட்டுள்ளது
'இனிமேல் அதற்குப் பங்களிக்க வேண்டிய தொகைகள் மற்றும் அத்தகைய நிதி, அவற்றுக்கான வட்டித் தொகைகள், 1885 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மற்றும் 1896 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நிதியத்துக்கு கொண்டு செல்லப்படும், மேலும் இது "விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதியம்" (இனி "நிதியம்" என்று குறிப்பிடப்படுகிறது) என்று குறிப்பிடப்படுவதுடன், இனி வழங்கப்பட்டுள்ளபடி விதவைகள் மற்றும் அனாதைகளுக்கான ஓய்வூதியங்கள், இரத்து செய்யப்பட்ட சட்டங்களின் விதிகளுக்கு உட்பட்டு, தற்போது விதிக்கப்படும் மற்றும் தற்போது அல்லது இனிமேல் பங்களிக்கும் பொது அலுவலர்களின் விதவைகள் மற்றும் அனாதைகளுக்கு இனிமேல் உள்ள விதிகளின் கீழ் மற்றும் அதற்கு உட்பட்டு அதன் நிர்வாகச் செலவுகளைச் செலுத்துவதற்குப் பொருந்தும்.' - ஒரு அலுவலர் வி&அஓ திட்டத்தில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் 1898 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதியக் கட்டளைச்சட்டத்தின் .21ஆம் பிரிவின் மூலம் செய்யப்பட்டுள்ளன.
'21. ஒவ்வொரு பொது அலுவலரும், அவர் நிதியத்துக்கு பங்களிக்க வேண்டிய திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள், அவர் அவ்வாறு பொறுப்பேற்ற திகதி, அவரது சொந்த பெயர் மற்றும் அவர் பிறந்த திகதி ஆகியவற்றைக் குறிக்கும் அறிவிப்பை பணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும். அவர் திருமணம் செய்து கொண்டால் அவரது திருமணத் திகதி மற்றும் அவரது மனைவியின் பிறந்த திகதி, முழுப் பெயர் மற்றும் கன்னிப் பெயர், மேலும் அவருக்கு குழந்தைகள் இருந்தால் குழந்தைகளின் முழு பெயர்கள் மற்றும் அவர்கள் ஒவ்வொருவரதும் பிறந்த திகதியும்' - ஒரு பெண் பொது அலுவலரை விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் 1983 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய சட்டத்தின் 5வது பிரிவின் பிரகாரம் செய்யப்பட்டுள்ளன.
'ஒவ்வொரு பங்களிப்பாளரும், அவர்கள் பங்களிப்பாளராக ஆன திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள், அவர் பங்களிப்பாளராக ஆன திகதி, அவருடைய முழுப் பெயர் மற்றும் அவர் பிறந்த திகதி மற்றும் அவர் திருமணமானவராக இருந்தால், அவரது திருமண திகதி, அவருடைய கணவரின் முழுப் பெயர் மற்றும் அவருக்கு குழந்தைகள் இருந்தால்; அவர்களின் முழுப் பெயர்கள் மற்றும் அவர்களின் பிறந்த திகதிகள் ஆகியவற்றை பணிப்பாளருக்கு பிரகடனப்படுத்த வேண்டும்'
வழிமுறை
- 02/2016 ஆம் இலக்க ஓய்வூதிய சுற்றறிக்கையின் படி 2016 ஆம் ஆண்டில், விதவைகள் மற்றும்அனாதைகள் ஓய்வூதியத் திட்டத்தின் பதிவு இயங்கலையில் தொடங்கப்பட்டது.
- ii. தற்போது பின்பற்றப்படும் முறையானது இயங்கலையில் விண்ணப்பங்களை பெறுவதும் மற்றும் தானாக உருவாக்கப்பட்ட இலக்கங்களை வழங்குவதும் ஆகும் 02/2016 ஆம் இலக்க மற்றும் 02/2016 (திருத்தம் 1) ஆம் இலக்க ஓய்வூதிய சுற்றறிக்கைகள் . இந்த நோக்கத்திற்காக வெளியிடப்பட்டவை ஆகும். இங்கே, தொடர்புடைய நிறுவனம் தொடர்புடைய ஆவணங்களை தரவு அமைப்பில் பதிவேற்ற வேண்டும்.
- ஓய்வூதியத் திணைக்களத்தில் விடயத்துக்கு பொறுப்பான அலுவலர்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு அவர்களின் அணுகல் மூலம் இலக்கங்களை வழங்குகிறார்கள். உறுப்பினர் அட்டை இலக்கங்களைக் கொண்டுள்ளது, இது ஒரு மென் பிரதியாக காட்டப்படும், மேலும் இங்கு ஒரு வன் பிரதியையும் பெறலாம். மென் பிரதியைப் பெறுவதற்கு, ஓய்வூதியத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (pensions.gov.lk) 'பொது சேவைகள்' என்ற பட்டியலிற்குச் சென்று தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை உள்ளிடவும்.
- மேலும், குறைபாடுகள் உள்ள விண்ணப்பங்களை நிராகரிப்பதற்கும், தேவையான திருத்தங்களுடன் அவற்றை திரும்பப் பெறுவதற்கும் திருத்தத்திற்கான குறிப்புகளைப் பார்க்கவும் இந்த முறைமை நடவடிக்கை எடுக்கிறது. பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் திருத்தங்கள் செய்து மீண்டும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்
- விண்ணப்பப் படிவம் தொடர்பாக எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையிலும், அதைச் சமர்ப்பித்தல், தரவுகளை உள்ளிடுவதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் அல்லது குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்குவது வரை முடிக்கப்பட்ட பணி நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- திருமணமான ஆண்/பெண் அலுவலர்களின் மரணித்தால் வாழக்கைத் துணைக்கு பலன்களைப் பெறுவதற்கான செயல்பாட்டில் உறுப்பினர் இலக்கம் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டால், விதவைகள் / தபுதாரர்கள் மற்றும் அனாதைகளின் ஓய்வூதிய இலக்கத்தை பெறுவதற்காக, அலுவலரின் தனிப்பட்ட கோவை பராமரிக்கப்படும் அலுவலர் கடைசியாகப் பணியாற்றிய அலுவலகத்தில் மேலே ii இல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும்,04/2017 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கையின் மூலம், விதவைகள்/ தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டத்தின் இயங்கலை இலக்கங்களைப் பெற்று, இன்னும் சேவையில் உள்ள ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தைப் பார்வையிடவும் மற்றும் தங்கள் தகவல்களை உள்ளடக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் விவரங்கள் மற்றும் அதன் மூலம் பழைய இலக்கங்களின் கீழ் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். எவ்வாறாயினும், இந்த செயல்முறைக்கான காலக்கெடு 2021.12.31 அன்று காலாவதியாகிவிட்டது, ஆனால் நிறுவனங்களின் தனிப்பட்ட கோவைகள் தொடர்பான கடமைகளைச் செய்யும் அலுவலர்கள், பழைய இலக்கங்களைப் பெற்ற ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களின் விவரங்களை தங்கள் உள்நுழைவைப் பயன்படுத்தி மேலும் சேர்க்கலாம்.
06/2015 (1) ஆம் இலக்க ஓய்வூதிய சுற்றறிக்கையின் 8.2 ii ஆம் பிரிவின் கீழ் பின்வரும் முறையில் கோவைகளைப் இற்றைப்படுத்துவதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. ‘எதிர்காலத்தில், விதவைகள் மற்றும் அனாதைகளின் கோவைகளை இற்றைப்படுத்த தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஓய்வூதியத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கக்கூடாது, மேலும் அவை அந்தந்த நபரின் தனிப்பட்ட கோவையுடன் இணைக்கப்பட வேண்டும், மேலும் அதை அலுவலர் ஓய்வு பெற்றவுடன் சிவில் ஓய்வூதிய கோவையில் இணைத்தால் போதுமானது.’
முன்னர் பயன்படுத்தப்பட்ட முறைமையின்படி, சம்பந்தப்பட்ட பங்களிப்பாளரின் சேவை நிலையம் பங்களிப்பாளரின் திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களை ஓய்வூதியத் திணைக்களத்தின் வி&அஓ பிரிவுக்கு விதவைகள்/ தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய இலக்கத்தை குறிப்பிடுகிறது மேலும் அவை தொடர்புடைய இலக்கத்துக்கான கோவையில் இணைக்கப்பட்ட வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
- நிரந்தர மற்றும் ஓய்வூதிய உரித்துடைய நியமனக் கடிதம்
- தேசிய அடையாள அட்டையின் பிரதி
- தொடர்புடைய நிறுவனத் தலைவரால் முழுமையாக்கப்பட்ட தரவுத் தாள்
- ஸ்தாபனக் குறியீடு மற்றும் 23/94 இலக்கம் பொது நிர்வாகச் சுற்றறிக்கை ஆகியவற்றின் விதிகளின்படி அரச சேவைக்கு ஆட்சேர்ப்புக்கான அதிகபட்ச வயது வரம்பு 45 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, அலுவலர் ஒருவர் 45 வயதுக்கு மேல் நியமனம் பெற்றால், முறையாக நியமனம் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தும் கடிதம் மற்றும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
உ-ம் -.1. அத்தகைய நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவையின் ஒப்புதல்/p>
2. இந்த நோக்கத்திற்காக பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை.
- ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை 25/2014 , 25/2014(i), 25/2014(ii)
3. 45 வயதை அடையும் முன், அமைய/ தற்காலிக/ ஒப்பந்தம்/ மாற்று அடிப்படையில் ஒரு நியமனம் வழங்கப்பட்டிருந்தால்-
- வழங்கப்பட்ட நியமனக் கடிதம்
- பொதுச் சேவை வருங்கால வைப்பு நிதியம் அல்லது வேறு ஏதேனும் வருங்கால வைப்பு நிதியின் விவரங்கள், அத்தகைய நிதிக்கு பங்களிப்புகள் செய்யப்பட்டிருந்தால்
- பொது 226 படிவத்தில் வரலாற்றுத் தாளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள்
- நியமனம் உரிய முறையில் வழங்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கான வேறு ஆவணங்கள் மற்றும் நியமனம் பற்றிய விவரங்களை நிரூபிக்க தெவையான ஆவணங்கள்
- சம்பந்தப்பட்ட பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள செய்தித்தாள் விளம்பரம்/ வர்த்தமானி அறிவிப்பு போன்ற விவரங்கள்
விண்ணப்பம்
உறுப்பினர் சான்றிதழ் பெறுதல்.
பயன்படுத்தப்படும் சுற்றறிக்கைகள்
- 03/2008 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை - பங்களிப்புகளை அறவிடுவதற்கான வழிமுறைகள்
- 02/2013 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை - பங்களிப்புகளை அறவிடுவதற்கான வழிமுறைகள்
- 03/2014 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை - செயல்படுத்துவதற்கான காலத்தை நீட்டித்தல்.
- 02/2016, 02/2016(1) ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை ,02/2016(1) – இயங்கலைப் பதிவு
- 04/2017 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை - மீள்பதிவு
- 3/2008(සංශෝධන 1) ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கை - பங்களிப்புகளை அறவிடுவதற்கான வழிமுறைகள்