Uncategorised
முப்படையினருக்கான ஓய்வூதிய நன்மைகள்
இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகிய மூன்று ஆயுதப் படைகள் நிறுவப்பட்டுள்ளன. 17 ஆம் இலக்க 1949 ஆம் ஆண்டின் இராணுவச் சட்டம், 41ஆம் இலக்க 1949 ஆம் ஆண்டின் விமானப்படைச் சட்டம் மற்றும் 34 ஆம் இலக்க 1950 ஆம் ஆண்டின் கடற்படைச் சட்டம் ஆகியவற்றால் நிறுவப்பட்ட ஏற்பாடுகளுக்கமையவும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்பவும் முப்படையினருக்கும் ஆயுதப்படை சேவைகள் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
இராணுவ சட்டத்தின் 29 மற்றும் 155 பிரிவுகளின் படி உருவாக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டின் இராணுவப் பணிக்கொடை ஓய்வூதிய சட்டக் கோவை, விமானப்படைச் சட்டத்தின் பிரிவு 29 மற்றும் 155 ஆம் பிரிவுகளின் படி உருவாக்கப்பட்ட விமானப்படை பணிக்கொடை ஓய்வூதிய சட்டக் கோவை மற்றும் கடற்படை சட்டத்தின் 161 ஆம் பிரிவால் உருவாக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டின் கடற்படை ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை சட்டக் கோவை ஆகியவை ஆயுதப் படைகளின் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் முக்கிய சட்ட ஆதாரங்கள் ஆகும்.
ஆயுத சேவைகள் பிரிவு மூலம் வழங்கப்படும் ஓய்வூதியம்
ஆயுதப்படைகளின் ஓய்வூதியத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் (அஞ்சல் வகை 07)
இதன் கீழ், பணிக்கொடை வழங்கப்பட்டு, அவர்களின் கூட்டு சம்பளம் அதிகரிக்கப்பட்ட இராணுவ அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அலுவலர்களின் ஆயுத சேவை ஓய்வூதியத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன, மேலும் அவர்களுக்கு (படிகள் மற்றும் பிற கொடுப்பனவுகளின் திருத்தம் தொடர்பான விடயங்கள், மேலும் அவர்களின் தரத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியத்திற்கான உரிமை போன்றவை.)
தகுதியுள்ள நபர்கள் :
- ஏற்கனவே சேவை ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்
- ஓய்வு பெறுவதற்கு மட்டுமே ஒரு உரிமையை வழங்கி அனுப்பப்பட்ட இராணுவ உறுப்பினர்கள்
தேவையான ஆவணங்கள் :
- திருத்தத்திற்கான விண்ணப்பம்
- முந்தைய கொடுப்பனவுகள் தொடர்பான கொடைப் பத்திரப் பிரதி
- வங்கிக் கணக்கின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- ஆயுத சேவைகள் ஓய்வூதியம் செலுத்த விண்ணப்பித்த படிவம்
திருத்தம் (55 வயதில் செய்யப்பட்டது) (அஞ்சல் வகை 25)
ஊனமுற்றமை காரணமாக ஓய்வு பெற்று 55 வயது வரை ஊதியம் பெறும் இராணுவ உறுப்பினர்கள் 55 வயதில் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியத்தில் திருத்தம் செய்யப்பட்டும்.
தகுதியுள்ள நபர்கள் :
- ஊனம் காரணமாக ஓய்வு பெற்ற பின்னர் 55 வயது வரை ஊதியம் பெறும் இராணுவ உறுப்பினர்கள்
- யுத்தப் பகுதிகளில் சேவையின் போது ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்கள்
தேவையான ஆவணங்கள் :
- திருத்தத்திற்கான விண்ணப்பம்
- முந்தைய கொடுப்பனவுகள் தொடர்பான கொடைப்பத்திர பிரதிகள்
- வங்கிக் கணக்கின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- ஆயுத சேவைகள் ஓய்வூதியம் கொடுப்பனவுக்கு விண்ணப்பித்த படிவம்
- தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
10/12 ஆண்டுகளுக்கும் குறைவான சேவைக் காலம் உள்ளவர்களின் ஓய்வூதியம் (அஞ்சல் வகை 11)
10/12 ஆண்டுகளுக்கும் குறைவான சேவையில் உள்ள மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளால் ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்களுக்கு இந்த சம்பளம் வழங்கப்படுகிறது. வகை 59 இன் கீழ் பணம் செலுத்தப்படுகிறது.
2014.12.17 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர்களுக்கும், 2014.12.17 ஆம் திகதிக்கு பிறகு ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர்களுக்கும், ஓய்வு பெறும் திகதியின் அடிப்படையில் கொடுப்பனவு செலுத்தப்படுகிறது.
இந்த சேவை ஓய்வூதியத்திற்கான உரிமையை வழங்கும் போது, ஓய்வு பெறும் போது பெறப்பட்ட சம்பளத்தில் இருந்து 60% சதவீதம் வழங்கப்படும்.
தகுதியுள்ள நபர்கள் :
- 10/12 வருடங்களுக்கும் குறைவான சேவைக் காலம் கொண்ட மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளால் ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்கள்.
- 2014.12.17 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர்களுக்கும், 2014.12.17 ஆம் திகதிக்கு பிறகு ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர்களுக்கும், ஓய்வு பெறும் திகதியின் அடிப்படையில் கொடுப்பனவு செலுத்தப்படுகிறது.
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- வங்கிக் கணக்கின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- பிறப்புச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- சேவை ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான ஒப்புதலைப் பிரயோகிப்பதற்கான ஒரு உறுதிமொழி (அரசாங்கத்திடம் திரும்பப் பெறுதல்)
- சம்பள விவரங்கள்
- ஆயுதப்படை ஓய்வூதியம் செலுத்துவதற்கான படிவம்
- பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால் சத்தியக் கடிதம்
வாழ்வாதார கொடுப்பனவு (அஞ்சல் வகை 04)
இராணுவத்தில் பணிபுரியும் போது ஏற்படும் ஊழியர்களின் மரணம் இராணுவத்தின் சேவையில் ஏற்பட்ட மரணமாக தீர்மானிக்கப்படும் பட்சத்தில், மேலும், ராணுவத்தில் பணிபுரியும் போது, ஊனமுற்றதன் காரணமாக ஓய்வு பெறுவதற்காக அனுப்பப்பட்ட ஒருவர் இறந்தால், தங்கிவாழ்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படலாம், அந்த நபரை இராணுவத்தில் இருந்து நீக்கும் போது கண்டறியப்பட்ட நோயின் காரணமாக மரணம் ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டால், அத்தகைய தங்கிவாழ்பவர்களுக்கு வழங்கப்படும்.
இராணுவத்தில் இருக்கும் போது ஏற்படும் குறைபாடுகள் காரணமாக அல்லது சேவையில் இருக்கும் போது ஏற்படும் மரணம் காரணமாகச் சார்ந்திருப்பவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வழங்கப்படும் கொடுப்பனவு, வாழ்வாதார கொடுப்பனவு எனப்படும்.
தகுதியுள்ள நபர்கள் :
- மருத்துவக் காரணங்களுக்காக ஓய்வு பெறுவதற்குப் பிறகு மரணமடைந்த இராணுவ உறுப்பினர்களைச் தங்கிவாழ்பவர்கள் (அனைத்து காரணங்களும்)
- சேவையில் இருக்கும் போது மற்றும் விடுப்பில் இருக்கும் போது நோய் காரணமாக மரணம் அடைந்த இராணுவ உறுப்பினர்களை தங்கிவாழ்பவர்கள்.
- சேவையிலிருந்து விடுப்பில் வீட்டிற்குச் செல்லும்போதும், மற்றும் பணிக்கு அறிக்கை செய்வதற்காக திரும்பிச் செல்லும்போதும் விபத்துக்களால் இறக்கும் இராணுவ உறுப்பினர்களைச் சார்ந்திருப்பவர்கள்.
தற்போது வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்படாத சந்தர்ப்பங்கள் :
- விபத்துக்கள் (மோட்டார் வாகனங்கள்) மற்றும் விடுப்பில் இருக்கும் நபர் எதிர்கொள்ளும் பல்வேறு விபத்துகள்
- மாரடைப்பு மற்றும் இயற்கை மரணம்
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- படிவம்- படைகள் 01
- இராணுவம்/ கடற்படை/ விமானப்படைத் தளபதியின் முடிவு
- மருத்துவ குழுவின் அறிக்கை
- சிப்பாயின் பிறப்புச் சான்றிதழ்
- சிப்பாயின் தேசிய அடையாள அட்டையின் பிரதி
- சிப்பாய் இறந்ததற்கான சான்றிதழ்
- ஒரு சத்தியக்கடிதம் (பெயரில் வேறுபாடு காணப்பட்டால்)
- தங்கிவாழ்பவர்களுக்கு வழங்கப்பட்ட பிரதேச செயலாளரின் மீள்பதிவு
திருமணம் செய்து கொண்டால்
- சிப்பாயின் திருமணச் சான்றிதழ்
- விதவையின் பிறப்புச் சான்றிதழ்
- விதவையின் தேசிய அடையாள அட்டையின் பிரதி
- தற்போது விதவையின் குடியியல் நிலை குறித்த அறிக்கை
- விதவையின் வங்கி புத்தகத்தின் பிரதி
- சத்தியக்கடிதம் (பெயரில் ஏதேனும் மாற்றம் இருந்தால்)
- குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள்
- குழந்தைகளின் வங்கி புத்தகங்களின் பிரதி
- மகளின் குடியியல் நிலை குறித்த அறிக்கை (அவர் 18 வயதுக்கு மேல் இருந்தால்)
- சிப்பாய் மற்றொரு திருமணம் செய்து கொண்டால் திருமணச் சான்றிதழின் பிரதி /பிரதிகள்
- வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்திருந்தால், விவாகரத்து சான்றிதழ்/கள்
- விதவை மீண்டும் திருமணம் செய்து கொண்டால் திருமணச் சான்றிதழ்
- அனாதைகளின் பாதுகாப்பு தொடர்பான பிரதேச செயலாளரின் அறிக்கை
- பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையின் பிரதி
- பாதுகாவலரின் வங்கி புத்தகத்தின் பிரதி
- சத்தியக்கடிதம் (பாதுகாவலரின் பெயரில் ஏதேனும் வேறுபாடு காணப்பட்டால்)
திருமணமாகாதவராக இருந்தால் :
- குழந்தைப் பருவத்தில் பெற்றோர்/தாய்/தந்தையினால் அந்த குழந்தைக்கு பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் போஷாக்குணவு அளிக்கப்பட்டது என்பதற்கான பிரதேச செயலாளரின் அறிக்கை
- இராணுவ சிப்பாய் இறக்கும் போது பெற்றோர்கள் அவரது பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் இருந்ததாக பிரதேச செயலாளரின் அறிக்கை
- பெற்றோரின் திருமணச் சான்றிதழ்
- தாயின் பிறப்புச் சான்றிதழ்
- தாயின் தேசிய அடையாள அட்டையின் பிரதி
- தாயின் வங்கி புத்தகத்தின் பிரதி
- சத்தியக்கடிதம் (பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால்)
- தந்தையின் பிறப்புச் சான்றிதழ்
- தந்தையின் தேசிய அடையாள அட்டையின் பிரதி
- தந்தையின் வங்கி புத்தகத்தின் பிரதி
- சத்தியக்கடிதம் (தந்தையின் பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால்)
- தாய் / தந்தையின் இறப்புச் சான்றிதழ், அவர்களில் யாராவது இறந்துவிட்டால்
- பெற்றோர் விவாகரத்து செய்திருந்தால், விவாகரத்து சான்றிதழ் (முற்றான தீர்வை)
சேவைகள் ஊனமுற்றோர் ஓய்வூதியம்- (அஞ்சல் வகை 14)
10/12 க்கும் அதிகமான சேவைக் காலத்தை நிறைவு செய்து, சேவை நிபந்தனைகள் /பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக மருத்துவ ரீதியாக ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்கள், சேவை ஓய்வூதியத்துடன் ஊனமுற்ற ஓய்வூதியத்திற்கான உரிமையைப் பெறுகின்றனர்.
தகுதியுள்ள நபர்கள் :
- 10/12 க்கும் அதிகமான சேவைக் காலத்தை நிறைவு செய்து, சேவை நிபந்தனைகள் /பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக மருத்துவ ரீதியாக ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்கள்.
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- வங்கி புத்தகத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி (தனி நபர்)
- ஆயுதப்படை ஓய்வூதியம் செலுத்தும் படிவம்
- பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், ஒரு சத்தியக் கடிதம்
இராணுவத்தின் மரணக் பணிக்கொடை (அஞ்சல் வகை 16)
சேவையில் இருக்கும் போது இறக்கும் இராணுவ உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை.
தகுதியுள்ள நபர்கள் :
- 5 வருடங்களுக்கும் மேலான சேவைக் காலத்தை உடைய மற்றும் பணிக்கொடைக்கான உரிமையுள்ள சேவையின் போது இறக்கும் இராணுவ உறுப்பினர்கள்.
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- இறப்பு சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- ஆயுத சேவைகள் ஓய்வூதியம் செலுத்துவதற்கான படிவம்
- விண்ணப்பப் படிவம்- படைகள் 01
சேவைப் பணிக்கொடை (அஞ்சல் வகை 16)
20/22 ஆண்டுகளுக்கும் குறைவானதும் 10 ஆண்டுகளுக்கு மேலும் சேவைக் காலத்தை முடித்த இராணுவ அலுவலர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை.
தகுதியுள்ள நபர்கள் :
- 20/22 வருடங்களுக்கும் குறைவானதும் 10 வருடங்களுக்கு மேலானதும் சேவைக் காலத்தை முடித்த இராணுவ அலுவலர்கள்
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- வங்கி புத்தகத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி (தனிநபர்) (இவ/தேசேவ/மவ)
- ஆயுத சேவைகள் ஓய்வூதியம் செலுத்துவதற்கான படிவம்
- பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், ஒரு சத்தியக் கடிதம்
ஊனமுற்றோர் ஓய்வூதியம் (அஞ்சல் வகை 13)
சேவையின் போது அல்லது யுத்த நடவடிக்கைகளின் போது விபத்து அல்லது நோய்வாய்ப்பட்டுஊனமுற்ற ஆயுதப்படை உறுப்பினர்கள், அவர்கள் சேவைக்கு தகுதியற்றவர்கள் என்று இராணுவ மருத்துவ சபை தீர்மானித்த பின்னர் இராணுவம்/கப்பற்படை/விமானப்படை தளபதிகளால் பரிந்துரைக்கப்பட்டது, ஊனமுற்றோர் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள். இந்த ஊனமுற்றோர் ஓய்வூதியம் அவ் அலுவலர்களுக்கு வழங்கப்படும் சேவை ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள நபர்கள் :
- சேவையின் போது அல்லது யுத்த நடவடிக்கைகளின் போது விபத்து அல்லது நோய்வாய்ப்பட்டுஊனமுற்ற ஆயுதப்படை உறுப்பினர்கள்
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- ஆயுத சேவைகள் ஓய்வூதியம் செலுத்துவதற்கான படிவம்
விசேட இழப்பீட்டுக் கொடுப்பனவு (அஞ்சல் வகை 18)
கடமைக்கு அறிக்கை செய்யும் போது அல்லது கடமை முடிந்து திரும்பும் போது அவர்கள் எதிர்கொள்ளும் விபத்து காரணமாக மரணமடைந்த ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு.
தகுதியுள்ள நபர்கள் :
- கடமைக்கு அறிக்கை செய்யும் போது, கடமையில் இருக்கும் போது அல்லது கடமை முடிந்து திரும்பும் போது அவர்கள் எதிர்கொள்ளும் விபத்து காரணமாக மரணமடைந்த ஆயுதப்படை உறுப்பினர்களை சார்ந்திருப்பவர்கள்
தேவையான ஆவணங்கள் :
- இழப்பீட்டுக்கான கொடுப்பனவுப் படிவம்
- தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- இழப்பீட்டுக் குழுவின் சான்றளிக்கப்பட்ட அறிக்கையின் பிரதி
- படிவம்- படைகள் 01
1/24 கொடுப்பனவு (அஞ்சல் வகை 15)
மருத்துவ காரணங்களுக்காக சேவையில் இருந்து இராஜினாமா செய்து 2-2 1/2 வருடங்களுக்கும் மேலான ஆனால் 10 வருடங்களுக்கும் குறைவான சேவையை கொண்ட இராணுவ அலுவலர்களுக்கு செலுத்தப்படும் கொடுப்பனவு. இந்த கொடுப்பனவு அடிப்படை சம்பளத்தை 24 ஆல் வகுத்து, வேலை செய்த மாதங்களின் எண்ணிக்கையால் பெருக்கப்படுகிறது.
.
தகுதியுள்ள நபர்கள் :
- மருத்துவ காரணங்களுக்காக சேவையில் இருந்து இராஜினாமா செய்து 2-2 1/2 வருடங்களுக்கும் மேலான ஆனால் 10 வருடங்களுக்கும் குறைவான சேவையை கொண்ட இராணுவ அலுவலர்களுக்கு
தேவையான ஆவணங்கள் :
- சேவை பணிக்கொடைக்கான விண்ணப்பம்
- தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- வங்கி புத்தகத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- படிவம்- படைகள் 01
- பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், ஒரு சத்தியக் கடிதம்
வாரிசுகளுக்கான கொடுப்பனவுகள் (அஞ்சல் வகை 04)
ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையைப் பெறுவதற்கு முன்பு இறந்த இராணுவ உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள நபர்கள் :
- ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையைப் பெறுவதற்கு முன்பு இறந்த இராணுவ உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- அலுவலரின் இறப்புச் சான்றிதழ்
- திருமணச் சான்றிதழ்
- அலுவலரின் பிறப்புச் சான்றிதழ்
- குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழின் பிரதிகள்
- வங்கி புத்தகங்களின் பிரதிகள் (விதவைகள் மற்றும் குழந்தைகள்)
- தேசிய அடையாள அட்டையின் பிரதி (விதவைகள்)
- தேசிய அடையாள அட்டையின் பிரதி ( அலுவலரின் )
- பிரதேச செயலாளரின் அறிக்கை
- பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், ஒரு சத்தியக் கடிதம்
- பெற்றோரின் திருமணச் சான்றிதழ் ( அலுவலர் திருமணமாகாதவராக இருந்தால்)
- பெற்றோரின் தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகள் (அலுவலர் திருமணமாகாதவராக இருந்தால்)
- பெற்றோரின் வங்கி புத்தகங்களின் பிரதிகள் ( அலுவலர் திருமணமாகாதவராக இருந்தால்)
- படிவம்- படைகள் 01
Accordion
சேவையில் மீண்டும் பணியமர்த்தப்பட்ட பின்னர் இராணுவத்தின் உறுப்பினர் ஒருவர் மரணமடைந்தால் வழங்கப்படும் பணிக்கொடை.
தகுதியுள்ள நபர்கள் :
- சேவையில் மீண்டும் பணியமர்த்தப்பட்ட பின்னர் இராணுவத்தின் உறுப்பினர் ஒருவர் மரணமடைந்தால் தங்கி வாழ்வோருக்கு வழங்கப்படும்
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- அலுவலரின் இறப்புச் சான்றிதழ்
- திருமணச் சான்றிதழ்
- அலுவலரின் பிறப்புச் சான்றிதழ்
- குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழின் பிரதிகள்
- வங்கி புத்தகங்களின் பிரதிகள் (விதவைகள் மற்றும் குழந்தைகள்)
- Aதேசிய அடையாள அட்டையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி (விதவைகள்)
- தேசிய அடையாள அட்டையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி ( அலுவலரின் )
- பிரதேச செயலாளரின் அறிக்கை
- பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், ஒரு சத்தியக் கடிதம்
- பெற்றோரின் திருமணச் சான்றிதழ் ( அலுவலர் திருமணமாகாதவராக இருந்தால்)
- பெற்றோரின் தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகள் (அலுவலர் திருமணமாகாதவராக இருந்தால்)
- பெற்றோரின் வங்கி புத்தகங்களின் பிரதிகள் ( அலுவலர் திருமணமாகாதவராக இருந்தால்)
- படிவம்- படைகள் 01
- முன்பு செலுத்தப்பட்ட பணிக்கொடைக்கான கொடைப்பத்திரம்
சேவை ஊனமுற்றோர் ஓய்வூதியம் (மீள்நியமனம்) (அஞ்சல் வகை 20)
மீள்நியமனத்தின் பிறகு பணியாற்றும் போது ஊனமுற்ற அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் சேவை ஊனமுற்ற ஓய்வூதியம் என்று அழைக்கப்படுகிறது .
தகுதியுள்ள நபர்கள் :
- மீள்நியமனத்தின் பிறகு பணியாற்றும் போது ஊனமுற்ற அலுவலர்களுக்கு
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- அலுவலரின் பிறப்புச் சான்றிதழ்
- தேசிய அடையாள அட்டையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி
- வங்கி புத்தகத்தின் பிரதி
- அலுவலரின் 03 புகைப்படங்கள் (சான்றளிக்கப்பட்டவை)
- திறைசேரி 148 (02 பிரதிகள்), 147 ( பிரதி)
- முன்பு செலுத்தப்பட்ட பணிக்கொடைக்கான கொடைப்பத்திரம்
- படிவம்- படைகள் 01
- விருப்ப பிரகடனத்தின் 02 பிரதிகள்
- கையொப்பத்தின் 02 பிரதிகள்
- பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், ஒரு சத்தியக் கடிதம்
- ஊனம் பற்றிய மருத்துவ சபையின் அறிக்கை
- ஆயுத சேவைகள் ஓய்வூதியம் செலுத்துவதற்கான படிவம்
1740 ஆம் இலக்க வர்த்தமானியின் படி கொடுப்பனவு செலுத்துதல் (அஞ்சல் வகை 17)
இந்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தன்னார்வ சேவையில் உள்ள உத்தியோகத்தர்களும் வழக்கமான சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் நன்மைகளுக்கு உரித்துடையவர்களாக மாற்றப்பட்டனர்.
உ-ம். 10/12க்கு மேல் சேவைக் காலத்தை முடித்து மருத்துவ காரணங்களுக்காக சேவையை விட்டு வெளியேறிய அலுவலர்களுக்கு ஓய்வூதிய உரிமை வழங்குதல்
தகுதியுள்ள நபர்கள் :
- தன்னார்வ சேவையில் உள்ள உத்தியோகத்தர்கள்
தேவையான ஆவணங்கள் :
- விண்ணப்பம்
- தொடர்புடைய பணிக்கொடை செலுத்தப்பட்டமைக்கான கொடைப்பத்திரம்
- தேசிய அடையாள அட்டையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி
- வங்கி புத்தகத்தின் பிரதி
- படிவம்- படைகள் 01
வெளிநாட்டு ஓய்வூதியப் பிரிவு
ஓய்வூதியத் திணைக்களத்தின் வெளிநாட்டு ஓய்வூதியப் பிரிவானது, வேறொரு நாட்டின் குடியுரிமையை வைத்திருக்கும் அல்லது இலங்கையுடன் இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கும் அல்லது இரண்டு வருடங்களுக்கும் மேலாக வெளிநாடு செல்லும் இலங்கை ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவுகளைச் செய்கிறது. வெளிநாட்டு ஓய்வூதியங்கள் 1/2018 ஓய்வூதிய சுற்றறிக்கையின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன.
01/2018 சுற்றறிக்கையில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் (பதிவிறக்க இங்கே சொடுக்கவும், சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்) ஓய்வூதியத் திணைக்களத்தின் வெளிநாட்டு ஓய்வூதியப் பிரிவு பின்வரும் ஓய்வூதியர்களுக்கு வெளிநாட்டு ஓய்வூதிய வகைப்படுத்தலின் கீழ் கொடுப்பனவு செய்கிறது;
- வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஓய்வூதியர்கள்
- இலங்கையுடன் இரட்டைக் குடியுரிமையை வைத்திருத்தல்
- இரண்டு வருடங்களுக்கு மேலாக வெளிநாடு சென்றுள்ள இலங்கை ஓய்வூதியர்கள்
வெளிநாட்டு ஓய்வூதிய கொடுப்பனவுகள் இலங்கை வங்கி – மெட்ரோபொலிட்டன் கிளை, ஹட்டன் நஷனல் வங்கி – பஞ்சிகாவத்தை கிளை, பான் ஏசியா வங்கி – பொரளை கிளை, மக்கள் வங்கி – குயின்ஸ் கிளை மற்றும் தேசிய சேமிப்பு வங்கி – மாளிகாவத்தை கிளை ஆகியவற்றினால் பராமரிக்கப்படும் விசேட வங்கிக் கணக்கின் ஊடாக மட்டுமே செலுத்தப்படுகின்றன.
வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து ஓய்வூதியர்களும் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் டிசம்பர் 1 ஆம் திகதியிலிருந்து அந்தந்த ஆண்டின் மார்ச் 31 ஆம் திகதிக்குள் தமது வருடாந்த உயிர் வாழ்ச் சான்றிதழ்களை வழங்க வேண்டும். வெளிநாட்டு ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியத் திணைக்களத்தின் முன்னரங்க செயற்பாட்டு மேசைகளுக்குச் சென்றோ அல்லது வெளிநாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாகவோ தமது உயிர் வாழ்ச் சான்றிதழை தலைமை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
சேவைத் தேவையின் பேரில் கப்பலில் செல்லும் பிரதேச செயலகங்களால் கொடுப்பனவு செய்யப்படுகின்ற ஓய்வூதியர்கள், இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக பெறப்பட்ட தங்களின் உயிர்வாழ்ச் சான்றிதழை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
ஆறு (06) மாதங்களுக்கு விஞ்சாது ஒரு தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு செல்லும் ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் வெளிநாட்டு ஓய்வூதியமாக கருதப்பட மாட்டாது மேலும் அவர்களின் உயிர்வாழ்ச் சான்றிதழ்கள் வழக்கமான வழிமுறை மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
தொடர்புக்கு
தபால் முகவரி
ஓய்வூதியத் திணைக்களம்,
மாளிகாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை.
பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் (பதிவுச் செயல்முறை)
1/2018 ஆம் இலக்க ஓய்வூதிய சுற்றறிக்கையின் படி ஓய்வூதியர்கள் வெளிநாட்டு ஓய்வூதிய வகைப்படுத்தலின் கீழ் ஓய்வூதிய கொடுப்பனவை ஆரம்பிப்பதற்கு பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஓய்வூதியத்தை வெளிநாட்டு ஓய்வூதியமாக மாற்றக் கோரும் கடிதம் (கடன் பெற்றுக்கொண்டிருப்பின் அக் கடன் நிலுவைத் தொகையை தெளிவாகக் குறிப்பிடவும்)
அனைத்து ஆவணங்களும் வெளிநாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியால் சான்றுறுதிப்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது விண்ணப்பதாரரால் நேரடியாக இத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய ஆவணங்களில் கடவுச்சீட்டில் உள்ளவாறான சரியான கையொப்பம் இடப்படவேண்டும்
விதவைகள் & அனாதைகள் ஓய்வூதியத்திற்கான பதிவு (வி&அஓ)
குடியியல் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியரின் இறப்பு தொடர்பில் இத் திணைக்களத்திற்கு விரைவில் அறிவிக்கும் பொறுப்பு விதவை / தபுதாரர் அல்லது உறவினர்களுக்கு உள்ளது.
அதைத்தொடர்ந்து, இறந்தவரின் விதவைக்கு / தபுதாரருக்கு தகுதியிருந்தால், வி&அஓ நன்மைகளைப் பெற, வெளிநாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் தகுதிவாய்ந்தஅதிகாரியால் சான்றுறுதிப்படுத்தப்பட்டு பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விதவை / தபுதாரர் இலங்கையில் இருந்தால் அவர் தனிப்பட்ட முறையில் திணைக்களத்திற்கு வந்து தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வி&அஓ நன்மைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு நீண்ட தாமதம் ஏற்பட்டால், ஓய்வூதிய நிலுவைத் தொகை 7.5 இலட்சத்துக்கு மேல் இருக்கும்பட்சத்தில், விண்ணப்பிக்க காலதாமதம் ஏற்பட்டமைக்கான நியாயமான காரணத்துடன், அந்த காலத்திற்கு ஓய்வூதியம் பெறவில்லை என்னும் சத்தியக்கடிதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மேலும் அக்காலத்திற்கு தொகையை ஏதும் செலுத்தியமை வெளிப்படுத்தப்பட்டால், இலங்கை அரசாங்கத்திற்கு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
வங்கி விபரங்கள்
பின்வரும் கிளைகளில் பராமரிக்கப்படும் சிறப்பு வங்கிக் கணக்குகள் மூலம் மட்டுமே வெளிநாட்டு ஓய்வூதிய வகைப்படுத்தலின் கீழான ஓய்வூதியக் கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்பட முடியும்.
ஓய்வூதியர் இத் திணைக்களத்தின் ஒப்புதலுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் வங்கிகளில் ஒரு சிறப்பு வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் (ஒப்புதல் கடிதம் இத் திணைக்களத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியால் சான்றளிக்கப்பட வேண்டும்).
இலங்கை வங்கி மெட்ரோபொலிட்டன்
பான் ஏசியா வங்கி பொரளை கிளை
மக்கள் வங்கி தலைமைச்செயலக கிளை
ஹட்டன் நஷனல் வங்கி பஞ்சிகாவத்தை கிளை
மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுதல்
அவர்களின் சிறப்பு வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,
- 1. அதே வங்கியில் உள்ள ஓய்வூதியரின் பெயரில் பராமரிக்கப்படும் தனிப்பட்ட சேமிப்புக் கணக்கு, அல்லது
- 2. ஓய்வூதியரின் பெயரில் பராமரிக்கப்படும் ஒரு வெளிநாட்டு வங்கியின் ஒரு தனிப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு
- மற்ற வங்கிகளுக்கு மாற்றுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
- ஓய்வூதியர் ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் செல்லுபடியாகும் உயிர் வாழ்ச் சான்றிதழுடன் உரிய விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்
வாரிசுகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகள்
ஓய்வூதியம் / விஅ& ஓ ஓய்வூதிய நிலுவையைச் செலுத்துதல்
நிறுத்திவைக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் தொடங்கும் போது நிலுவைத் தொகை ரூ.750,000.00க்கு குறைவாக இருந்தால்,அந் நிலுவைத் தொகை கொடுப்பனவு செய்யப்படும். ரூ.750,000.00க்கு மேல் தொகை இருந்தால் விசேட குழுவின் ஒப்புதலுக்குப் பின்னர் பணம் செலுத்தப்படும்.
தேவையான ஆவணங்கள்,
- 1. கோரிக்கை கடிதம்
- 2. நிலுவைத் தொகை செலுத்தத் தொடங்கும் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முந்தைய ஓய்வூதியம் தொடர்புடைய வங்கிக் கணக்கின் பரிவர்த்தனை அறிக்கை
- 3. செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் பிரதிகள்
- 4. தேசிய அடையாள அட்டை (தேஅஅ) பிரதி
- 5. குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்றும் செலுத்தப்பட்ட தொகையை வெளிப்படுத்தினால் அத் தொகை இலங்கை அரசுக்கு திருப்பிச் செலுத்தப்படும் என்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் தகுதியான அதிகாரியின் சான்றொப்பத்துடன் அறிவிக்கும் ஒரு சத்தியக் கடிதம்.
உயிர்வாழ்ச் சான்றிதழ்
- 1. வெளிநாட்டு ஓய்வூதியர் ஓய்வூதியத் திணைக்களத்தின் வெளிநாட்டு ஓய்வூதியக் கிளையின் முன்னரங்க செயற்பாட்டு மேசைகளுக்குச் சென்று அல்லது வெளிநாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தமது உயிர்வாழ்ச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
- 2. வெளிநாட்டில் வசிக்கும் அல்லது வெளிநாட்டு ஓய்வூதியப் பிரிவால் ஓய்வூதியக் கோவை பராமரிக்கப்படும் அனைத்து ஓய்வூதியர்களும் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் டிசம்பர் 1 ஆம் திகதியிலிருந்து அவ்வவ் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்குள் தமது உயிர்வாழ்ச் சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஓய்வூதியத் திணைக்களத்தின் தலைமைச் செயலகத்தின் முன்னரங்க செயற்பாட்டு மேசைகளுக்குச் சென்று அல்லது வெளிநாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தமது உயிர்வாழ்ச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்
- 3. இரண்டு வருடங்களுக்கும் குறைவான கலத்திற்கு சேவையின் தேவையின் பேரில் பயணம் செய்யும், பிரதேச செயலகங்களால் கொடுப்பனவு செலுத்தப்படும் ஓய்வூதியர்கள் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் பெறப்பட்ட அவர்களின் உயிர்வாழ்ச் சான்றிதழை அந்தந்த பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
- 4. ஆறு (06) மாதங்களுக்கு விஞ்சாமல் ஒரு தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு செல்லும் ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் வெளிநாட்டு ஓய்வூதியமாக கருதப்பட மாட்டாது மேலும் அவர்களின் உயிர்வாழ்ச் சான்றிதழ்கள் வழமையான முறை மூலமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- 5. முதுமை அல்லது கடுமையான நோய் காரணமாக வெளிநாட்டில் தமக்கு அருகிலுள்ள இலங்கை தூதரகத்திற்குச் செல்ல முடியாத ஓய்வூதியர், சம்பந்தப்பட்ட நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரியின் சான்றிதழுடன் தங்கள் உயிர்வாழ்ச் சான்றிதழைச் சமர்ப்பித்து, அதை அந்தந்த தூதரகத்திற்கு தபாலில் அனுப்ப வேண்டும்.
- குறிப்பிட்ட ஆண்டிற்கான சரியான மாதிரிப் படிவத்தை பயன்படுத்துவதுடன் செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் பிரதியை இணைப்பது கட்டாயமாகும்.
- உயர் ஸ்தானிகராலயம் அதிகாரி / தூதரகம் அதிகாரி / இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர் / துணைத் தூதரக அதிபதி ஆகியோரில் ஒருவரால் சான்றளிக்கப்படாத வாழ்க்கைச் சான்றிதழ்கள் நிராகரிக்கப்படும்.
புகையிரத ஆணைச்சீட்டு
ஓய்வூதியத் திணைக்களம் இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து ஓய்வூதியர்களுக்கு புகையிரத ஆணைச்சீட்டுகளை அனுமதித்துள்ளதுடன், வெளிநாட்டு ஓய்வூதியர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படுகிறது.
வெளிநாட்டு ஓய்வூதியர்களாகவுள்ள இலங்கையர்கள் இப்போது தங்களின் புகையிரத ஆணைச்சீட்டு விண்ணப்பத்தை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் Click here to Download / பதிவிறக்கம்
விண்ணப்பதாரரால் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், இலங்கையின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுடன் ஓய்வூதியத் திணைக்களத்தில் உள்ள வெளிநாட்டு ஓய்வூதியப் பிரிவின் முன்னரங்க மேசைகளுக்குச் சென்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அரசிடமிருந்தான கொடுப்பனவு தொடர்பில் கடிதம்
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஓய்வூதியத்தைப் பெறுபவர் அல்ல என்பதை உறுதிப்படுத்தும் அரசிடமிருந்தான கொடுப்பனவு தொடர்பில் கடிதம் ஒன்றை ஓய்வூதியத் திணைக்களம் வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள்,
ஓய்வூதியவர் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், விண்ணப்பம் மற்றும் சத்தியக் கடிதம் வெளிநாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியால் சான்றளிக்கப்பட வேண்டும். ஆவணத்தை தயாரிக்கவும் சேகரிக்கவும் மூன்றாம் தரப்பு அங்கீகாரம் வெளிநாட்டு தூதரகத்திடமிருந்து பெறப்பட வேண்டும்.
ஓய்வூதியம் பற்றிய தகவல் கடிதம்
ஓய்வூதியத் திணைக்களம் இலங்கையராகவுள்ள வெளிநாட்டு ஓய்வூதியருக்கு அவரது கோரிக்கையின் பேரில் அவருடைய ஓய்வூதிய கொடுப்பனவு விவரங்களை உறுதிப்படுத்தும் கடிதத்தை வழங்குகிறது
தேவையான ஆவணங்கள்,
- 1. கோரிக்கை கடிதம்r
- 2. செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் பிரதிகள்
- 3. தேஅஅ (தேசிய அடையாள அட்டை) பிரதி
ஓய்வூதியக் கோவைகளை மீண்டும் பிரதேச செயலகத்திற்கு மாற்றுதல்
உங்களின் கடமைக்கான பயணம் முடிவடைந்து இலங்கை திரும்பிய பின்னர், மீண்டும் வெளிநாடு செல்ல விருப்பமில்லாதவிடத்து ஓய்வூதிய ஆவணங்களை அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு மாற்றுவதற்காக பின்வரும் ஆவணங்களை இந்தத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கவும்.
இந்தச் சலுகை வெளிநாட்டு குடியுரிமை வைத்திருப்பவர்களுக்கும் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தாது.
- வெளிநாட்டுக்கு திரும்பிச் செல்ல விருப்பம் இல்லை என்று குறிப்பிடும் கோரிக்கை கடிதம்
- உள்ளூர் வங்கிக் கணக்கின் பிரதி (தனிப்பட்ட சேமிப்பு கணக்கு)
- கிராம அலுவலரின் சான்றிதழ்
- கப்பலில் ஏறுவதற்கும் மற்றும் இறங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்ட கடவுச்சீட்டின் பிரதி.
மரணப் பணிக்கொடை
ஓய்வூதிய உரித்துடைய பதவியில் 60 மாதங்கள் மொத்த சேவையை முடித்த, நிரந்தர சேவையில் இருக்கும் போது இறக்கும் அரசு ஊழியர்களை சார்ந்திருப்பவர்களுக்கு ஒருமுறை பலன் அளிக்கும் வகையில் மரணப் பணிக்கொடை வழங்கப்படுகிறது. ஓய்வூதியக் பிரமாணக் குறிப்பின் 2 ஆ(1) ஆம் பிரிவின் கீழ் மரணப் பணிக்கொடைத் தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பின்னணி
சேவையின் போது இறக்கும் ஆண்/பெண் அலுவலர்களின் தங்கிவாழ்பவர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை வழங்கப்படும் பலனாக மரணப் பணிக்கொடை (மப) வழங்கப்படுகிறது. மரணப் பணிக்கொடையை வழங்குவதற்காக ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் 2 ஆ (1) ஆம் பிரிவின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மரணப் பணிக்கொடையை செலுத்துவதற்கு, சில தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
- ஓய்வூதிய உரித்துடைய பதவியில் பணியாற்றல்
- சேவையில் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
- 60 மாதங்கள் மொத்த சேவை காலத்தை நிறைவு செய்திருக்க வேண்டும்
- சேவையில் இருக்கும் போது இறந்திருத்தல் வேண்டும்.
சிவில் அலுவலர்களுக்கு மரணப் பணிக்கொடை வழங்க இலக்க வகை 16 பயன்படுத்தப்படும்
சேவையில் இருக்கும் போது மரணம் அடையும் முப்படைகளின் அலுவலர்களுக்கு மரணப் பணிக்கொடை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் ஆயுதப்படை பிரிவினால் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுச் சேவையில் இருக்கும் போது மரணம் அடையும் மதகுருமார்களுக்கு, அவர்களிடமிருந்து அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையைத் திரும்பப் பெறுவதற்காக மட்டுமே மரணக் பணிக்கொடை தொகை வழங்கப்படுகிறது.
மரணக் பணிக்கொடைத் தொகைக்கு உரிமையுள்ள நபர்கள்,
- திருமணமான ஆண்/பெண் பங்களிப்பாளர்களின்
சட்டப்பூர்வ விதவை/ தபுதாரர், ஆண்/பெண் பங்களிப்பாளர் இறந்த திகதியில் வேலையில்லாத மற்றும் திருமணமாகாத சட்டப்பூர்வ குழந்தைகள் - திருமணமாகாத ஆண்/பெண் பங்களிப்பாளர்களின்
திருமணமாகாத மற்றும் வேலையில்லாத சகோதர சகோதரிகள், திருமணமாகாத ஆண்/பெண் பங்களிப்பாளரால் தந்தை மற்றும் தாய் இருவரும் இறந்திருந்தால் - சட்டப்பூர்வ தங்கிவாழ்வோர் இல்லாத பட்சத்தில், அரசாங்கத்திற்குப் பங்களிப்பவர்களான ஆண்/பெண் அலுவலர்களிடமிருந்து பெற வேண்டிய தொகையை அறவிட மட்டுமே மரணக் பணிக்கொடை தொகைக்கான உரிமை வழங்கப்படுகிறது.
வழிமுறை
- 1. இயங்கலை முறைமை
- 2. இயங்கலையற்ற முறைமை
விண்ணப்ப செயல்முறையில் தொடர்புடைய நிறுவனத்தின் பங்கு
இயங்கலை முறைமை
- நிறுவனத்திற்குப் பொறுப்பான அலுவலர், ஆண்/பெண் பங்களிப்பாளரின் தனிநபர் கோவை ஊடாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- விதவைகள் / தபுதாரர்கள் / அனாதைகள் / பெற்றோர் / சகோதர சகோதரிகளிடமிருந்து விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் பெறப்பட்டவுடன், (பிறப்பு, திருமணம், இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி, வங்கி கணக்கு புத்தகங்களின் பிரதிகள், தங்கி வாழ்பவர்களுக்கான அறிக்கைகள் போன்றவை) கீழ்கண்ட நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர் எடுக்க வேண்டும்.
இயங்கலையற்ற முறைமை
பின்வரும் சந்தர்பங்கள் தொடர்பாக மரணப் பணிக்கொடைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்போது, 9/2015 ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பம் மற்றும் ஏனைய ஆவணங்களை ஓய்வூதியத் திணைக்களத்தின் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியப் பிரிவிற்கு அலுவலர் கடைசியாக பணியாற்றிய நிறுவனத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- 01.01.2006க்கு முன் இறந்த ஆண்/பெண் அலுவலர்களுக்கான மரணப் பணிக்கொடை வழங்குதல்.
- பயங்கரவாத நடவடிக்கைகளால் இறந்த ஆண்/பெண் அலுவலர்களுக்கான மரணப் பணிக்கொடை வழங்குதல்
- ஒன்று அல்லது பல தங்கிவாழ்வொருக்கு உரிமையுள்ள மரணப் பணிக்கொடை தொகையின் பாகங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் பிற சார்ந்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மரணப் பணிக்கொடை தொகையின் பகுதிகளைச் செலுத்துதல்.
இறந்த ஆண்/பெண் பங்களிப்பாளரின் தனிநபர் கோவை மூலம் விடயத்திற்குப் பொறுப்பான அலுவலரால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விதவைகள்/ தபுதாரர்கள்/ அனாதைகள்/ பெற்றோர்/ சகோதர சகோதரிகள் (மரணச் சான்றிதழ்/ பிறப்பு சான்றிதழ் / திருமணச் சான்றிதழ் ஆகியவற்றின் பிரதி, தேசிய அடையாள அட்டைகளின் பிரதி போன்றவை) ஆவணங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய தகவல்.
பழைய பிடி 5 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நிறுவனத் தலைவரால் சான்றளிக்கப்பட்டு, தொடர்புடைய பிற ஆவணங்களுடன் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பங்கள் இயங்கலை மூலம் அனுப்பப்படும் (இயங்கலை)
09/2015 (III) ஆம் இலக்க ஓய்வூதிய சுற்றறிக்கையின்படி இயங்கலை முறை மூலம் விண்ணப்பங்கள் மேலே 02.1.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் தவிரந்த எல்லா சந்தர்ப்பத்திலும் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் விண்ணப்பத்துடன் தொடர்புடைய தரவுகளை மட்டும் தரவு முறைமையில் பதிவேற்றம் செய்யவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் மற்றும் அனைத்து ஆவண சான்றுகளும் ஓய்வூதிய திணைக்களத்திற்கு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
இயங்கலையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக திணைக்களம் பின்பற்ற வேண்டிய செயல்முறை
இயங்கலை அல்லாத முறையின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் மீது திணைக்களம் பின்பற்றவேண்டிய செயல்முறை
தேவையான ஆவணங்கள்
- பிடி 5 விண்ணப்ப (இயங்கலை அல்லது முந்தைய விண்ணப்பம்)
- அலுவலரின் தேசிய அடையாள அட்டையின் பிரதி
- அலுவலரின் மரணச் சான்றிதழ்
- அலுவலரின் மரணச் சான்றிதழ்
- வாழ்க்கைத் துணையின் பிறப்புச் சான்றிதழின் பிரதி
- தங்கிவாழ்வோரின் பிறப்புச் சான்றிதழ்
- திருமணச் சான்றிதழ்
- வரலாற்று தாள்
- மனைவியின் தேசிய அடையாள அட்டையின் பிரதி
- அலுவலரின் நிரந்தர மற்றும் ஓய்வூதிய உரித்துடைய நியமனக் கடிதம்
- நியமனத்தை உறுதிப்படுத்தல் கடிதம்
- தங்கிவாழ்வோரின் தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகள்
- உரிமைகோராச் சான்றிதழ் (அரசுக்குச் செலுத்த வேண்டிய அனைத்துத் தொகைகளையும் சரியாகச் உள்ளிடல்)
- தங்கிவாழ்வோர் தொடர்புடைய அறிக்கை (கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரால் கையொப்பமிடப்பட்டது)
- இறந்த அலுவலரின் பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், நிறுவனத் தலைவரின் உறுதிப்படுத்தல்.
- மனைவியின் பெயரில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால் சத்தியக் கடிதம் அல்லது ஏதேனும் ஆவணச் சான்று.
- 03/2016 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி சம்பள மாற்றக் கடிதம்.
- சேவை முறிவுகள் கண்டறியப்பட்டால், உறுதிப்படுத்தலுக்கான கடிதங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள். (பதவி வெறிதாக்கல்/ பதவித் தடை/மீண்டும் பணியமர்த்தல் கடிதம்)
- தங்கிவாழ்வோர் இறந்திருந்தால் அவர்களின் மரணச் சான்றிதழ்.
- சம்பளமற்ற அல்லது சேவைக் முறிவு காலங்கள் கண்டறியப்பட்டால், விதவைகள் மற்றும் அனாதைகள் நிதிக்கான பங்களிப்புகள் அறவிடப்பட்டதை உறுதிப்படுத்தும் அறிக்கை.
- நாளாந்த ஊதிய சேவை காலம் இருந்தால், பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்,
- அந்த சேவை தொடர்பான நியமனக் கடிதம்
- வரலாற்றுத் தாள் [படிவம் பொது 226(அ)]
- பல திருமணங்கள் இருந்தால், ஒவ்வொரு திருமணத்திற்கும் தொடர்புடைய பின்வரும் ஆவணங்கள்,
- திருமணச் சான்றிதழ்
- வாழ்க்கைத் துணைவர்களின் மரணச் சான்றிதழ்கள்
- விவாகரத்துகளின் முற்றான தீர்வை - நீதிமன்றத்தின் பதிவாளரால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்
பயன்படுத்தப்படும் கட்டளைச் சட்டம், சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகள்
- 09/2015 மற்றும் 09/2015(III) ஓய்வூதிய சுற்றறிக்கை - இயங்கலை மூலம் விண்ணப்பித்தல்.
- ஓய்வூதிய பிரமாணக் குறிப்பு - ஒதுக்கீடு வழங்குதல்.
- 369 இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை - பயங்கரவாத நடவடிக்கைகளால் இறந்தவர்களுக்கு மரணப் பணிக்கொடை செலுத்துவதற்கான வழிமுறைகள்
மரணப் பணிக்கொடைக்குத் தகுதியுள்ள அலுவலர்களில் தங்கிவாழ்பவர்களுக்கு மரணப் பணிக்கொடை கொடுப்பனவு செய்யப்பட்டால், வி&அஓ கொடுப்பனவு செலுத்துதலும் விடயத்துடன் சம்பந்தப்பட்ட அலுவலரால் செய்யப்படும்.
இயங்கலை அல்லாத முறைமையின் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள்
- 2006.01.01 க்கு முன்னர் இறந்த அலுவலர்களின் சம்பள விவரங்கள் தரவு முறைமையில் சேர்க்காத போது..
- மரணப் பணிக்கொடை தொகையின் சில பகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டு பணம் செலுத்த இயலாத போது.
- பதவிகளுக்கு இடையே மாற்றம் உள்ளபோது சம்பளத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக தரவு முறைமையில் சம்பளக் குறியீடுகளைச் சேர்க்காத போது
- இறந்த அலுவலரது தேசிய அடையாள அட்டை இல்லாதபோது.
வி&அஓ பயன்கள்
விதவை/ தபுதாரர்கள் மற்றும் அனாதை ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்யும் செயல்முறை தொடக்கம் விதவை/ தபுதாரர்கள் மற்றும் அனாதை ஓய்வூதியத் திட்டத்தில் அனாதை ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் ஊனமுற்றோர் அனாதை ஓய்வூதிய கொடுப்பனவு ஆகியவற்றை அவர்களின் பயனாளிகளுக்கு வழங்குவது வரை அரசு ஊழியர்கள் இந்தப் பிரிவின் கீழ் பலன்களைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள்.
அறிமுகம்
ஓய்வூதியத் திணைக்களத்தின் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியப் பிரிவு, பொதுச் சேவையில் உள்ள விதவைகள்/ தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்குப் பலன்கள் வழங்குவது தொடர்பான பணிகளைச் செய்கிறது. சிவில் மற்றும் ஆயுதப்படைகளின் விதவைகள்/ தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியங்களுடன் மெலதிகமாக, விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய பிரிவு ஊனமுற்ற அனாதைகளுக்கான ஓய்வூதியம் வழங்கல், சிவில் மரணப் பணிக்கொடை வழங்கல் மற்றும் விதவைகள்/ தபுதாரர்கள் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியத் திட்டத்தில் பொது அலுவலர்களை பதிவு செய்வதற்கான செயல்முறைகளை செயல்படுத்துகிறது.
சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்கள்
- 01 ஆம் இலக் 1898, விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதிய கட்டளைச்சட்டம்
- 13 ஆம் இலக் 1906, விதவைகள் மற்றும் அனாதைகள் (திருத்தம்) சட்டம்
- 24 ஆம் இலக் 1983, தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியச் சட்டம்
- 44 ஆம் இலக் 1981, விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதிய (திருத்தம்) சட்டம்
- 57 ஆம் இலக் 1998, விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம்
- 08 ஆம் இலக் 2010, விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதிய (திருத்தம்) சட்டம்
- 19 ஆம் இலக் 1985, தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய (திருத்தம்) சட்டம்
- 16 ஆம் இலக் 1987, தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம்
- 56 ஆம் இலக் 1998, தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம்
- 65 ஆம் இலக் 1998, தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம்
- 02 ஆம் இலக் 2001, தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம்
- 09 ஆம் இலக் 2010, தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டம்
விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியப் பிரிவு
எங்களுடன் இணைய.
தொ.பே.இல | +94 112 332 346 |
மின்னஞ்சல் | +94 112 432 214 |
மின்னஞ்சல் | |
முகவரி | விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியப் பிரிவு, ஓய்வூதியத் துறை, புதிய செயலக கட்டிடம், மாளிகாவத்தை, கொழும்பு 10. |